சிலிண்டர் திடீர் விலை குறைப்பு! வெளியானது அதிரடி அறிவிப்பு 

Photo of author

By CineDesk

சிலிண்டர் திடீர் விலை குறைப்பு! வெளியானது அதிரடி அறிவிப்பு

எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் பெட்ரோல் டிசல் விலையை மாற்றி அமைப்பதை போல், சிலிண்டர் விலை நிலவரத்தையும் மாதம் ஒரு முறை மாற்றி அமைத்து வருகின்றனர். அதன்படி நவம்பர் மாதத்திற்கான சிலிண்டர் விலை இன்று மாற்றி அமைக்கப்பட்டுள்ளது .

இந்த அறிவிப்பின்படி வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ .116 குறைந்துள்ளது. இந்த நிலையில் சென்னையில் 19 கிலோ எடை உள்ள வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ. 1,893க்கு விற்பனை செய்யப்படுகிறது .

மேலும் 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக சிலிண்டர் விலை மாற்றம் இன்றி ரூ.1,068-க்கு விற்ப்பனை செய்யப்படுகிறது. இந்த விலை குறைப்பு இன்று முதல் நடைமுறைபடுத்தப்படுகிறது.

அக்டோபர் மாதம் ரூ.2,009-க்கு விற்பனை செய்யப்பட்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தற்போது குறைந்துள்ளதால் வணிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர் .