நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம் – ஜெயக்குமார் சூசகம் 

Photo of author

By Anand

நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம் – ஜெயக்குமார் சூசகம்

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார்சூசகமாக கூறியுள்ளார்.

சென்னை, ராயப்பேட்டையில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது, 2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம். அது வேற விசயம். தேர்தல் ஆணைய அட்டவணையின்படி 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் வரும் போது மகத்தான வெற்றியை அ.தி.மு.க. பெறும். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் ஆட்சி தமிழ்நாட்டில் மலரும்”என்று அவர் அப்போது தெரிவித்தார்.

மேலும் அவரிடம் செய்தியாளர்கள் , அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் ஒற்றுமையாக செயல்பட உறுதி ஏற்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் சொல்லி இருக்கிறாரே? என்று கேட்டனர். அதற்கு அவர் அவரிடம்(ஓ.பன்னீர்செல்வம்) இருக்கும் 4 பேருக்காகத்தான்(எம்.எல்.ஏ.க்கள்) அவர் இதை சொல்கிறார். ஏனென்றால் அவர்களும் அவரைவிட்டு போய் விடக் கூடாது.’ என்று பதிலளித்தார்.