ஆஸ்கர் விருது வாங்க 50 கோடி ரூபாய் வரை செலவு செய்ய உள்ள ராஜமௌலி!

0
238

ஆஸ்கர் விருது வாங்க 50 கோடி ரூபாய் வரை செலவு செய்ய உள்ள ராஜமௌலி!

ராஜமௌலி இயக்கியுள்ள RRR திரைப்படம் இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியாகி நல்ல வசூலைப் பெற்றது.

சினிமா துறையில் வழங்கப்படும் விருதுகளில் மிகவும் பரவலாக அறியப்படுவதும் கௌரவமான ஒன்றாகவும் கருதப்படும் விருது ஆஸ்கர் விருதுகள். அமெரிக்க படங்களுக்காக வழங்கப்படும் இந்த விருதில் வெளிநாட்டு படங்கள் என்ற பிரிவில் மற்ற நாடுகளின் படங்களுக்கு விருதுகள் வழங்கப்படுகிறது.

ஆனால் இந்த விருதை ஒருமுறைக் கூட இந்திய படங்கள் வாங்கவில்லை. இந்தியாவின் சார்பாக சென்ற லகான் திரைப்படம் மட்டும் கடைசி சுற்று வரை முன்னேறியது. இந்நிலையில் இந்த ஆண்டு இந்தியா சார்பாக ஆர் ஆர் ஆர் அல்லது காஷ்மீர் பைல்ஸ் ஆகிய திரைப்படத்தில் ஏதாவது ஒன்று ஆஸ்கருக்கு அனுப்பப்படும் என சொல்லப்பட்டது. ஆனால் அனைத்துக் கணிப்புகளையும் பொய்யாக்கி “செல்லோ ஷோ” என்ற குஜராத்தி படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் மனம் தளராத இயக்குனர் ராஜமௌலி ‘பரிந்துரை’ பிரிவில் RRR படத்தை 15 பிரிவுகளில் ஆஸ்கருக்கு அனுப்பியுள்ளாராம். அனுப்பியதோடு மட்டும் இல்லாமல் படத்தை ப்ரமோட் செய்ய இப்போது அமெரிக்காவில் முகாமிட்டு பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு தன்னுடைய படங்கள் அனைத்தையும் திரையிட்டு அமெரிக்க ரசிகர்களைக் கவர முயற்சி செய்துவருகிறார். இதற்காக அவர் சுமார் 50 கோடி ரூபாய் வரை செலவு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன

Previous articleநாடாளுமன்ற தேர்தலுடன் தமிழக சட்டமன்ற தேர்தலும் வரலாம் – ஜெயக்குமார் சூசகம் 
Next articleதீபாவளிக்குப் பிறகும் ஓடும்… வேற லெவலில் மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here