எதிர்த்து பேசியதால் ஈவிரக்கமின்றி பெற்ற மகனையே சுட்டுக்கொன்ற தத்தை! திருச்சி அருகே பரபரப்பு!

Photo of author

By Rupa

எதிர்த்து பேசியதால் ஈவிரக்கமின்றி பெற்ற மகனையே சுட்டுக்கொன்ற தத்தை! திருச்சி அருகே பரபரப்பு!

Rupa

Updated on:

Daddy who shot his own son mercilessly because he spoke against it! Excitement near Trichy!

எதிர்த்து பேசியதால் ஈவிரக்கமின்றி பெற்ற மகனையே சுட்டுக்கொன்ற தத்தை! திருச்சி அருகே பரபரப்பு!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்து தாதகவுண்டம்பட்டியில் வசித்து வருபவர் தான் அழகர் என்கிற ராஜா. இவர் இரு திருமணங்கள் செய்து கொண்டார். இவரது இரண்டாவது மனைவியின் பெயர் அம்சவள்ளி. இரண்டாவது மனைவிக்கு கடைசியாக பிறந்தவர்தான் பாலசுப்ரமணியம். வெகுநாட்களாக பாலசுப்பிரமணியன் தந்தை தொடர்ந்து குடும்பத்தில் சண்டையிட்டு வந்துள்ளார். அவரு சண்டையிடும் போதெல்லாம் பாலசுப்பிரமணியம் அவர் தந்தையை எதிர்த்து வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கமாக கொண்டுள்ளனர்.இதேபோல நேற்று இரவும் பாலசுப்ரமணியன் தந்தை இரண்டாவது மனைவியின் குடும்பத்தில் தொடர்ந்து சண்டையிட்டு வந்துள்ளார். சண்டையினால் பாலசுப்ரமணியன் தந்தைக்கும் அவருக்கும் தொடர் வாக்குவாதங்கள் ஏற்பட்டது.

இந்த வாக்குவாதம் அடுத்து பாலசுப்ரமணியம் இரவு முழுவதும் காணவில்லை. பாலசுப்பிரமணியம் வாகனம் பழுது நீக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இவரது வீட்டின் அருகே தனியாருக்கு சொந்தமான ஓர் புளியந்தோப்பு உள்ளது. அந்த புளியந்தோப்பில் பாலசுப்ரமணியம் ரத்த வெள்ளத்தில் இருப்பதாக போலீசாருக்கு அக்கம்பக்கத்தினர் தகவல் அளித்துள்ளனர். இந்நிலையில் தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனையிட்டனர். அதில் பாலசுப்பிரமணியம் கழுத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்து கிடந்தார். மேலும் பாலசுப்ரமணியத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு திருச்சி அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

அதுமட்டுமின்றி பாலசுப்பிரமணியன் சடலத்திற்கு அருகில் உடைந்த நிலையில் நாட்டுத்துப்பாக்கி ஒன்று கண்டறியப்பட்டது.மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அப்பா மகன் வாக்குவாதத்தில் அப்பா பெற்ற மகனையே சுட்டுக்கொன்றார் என்றெல்லாம் சந்தேகம் எழுந்துள்ளது. அதேபோல பெற்ற மகன் இறந்த நிலையிலும் அவரது தந்தை தற்பொழுது தலைமறைவாக உள்ளது அனைவருக்கும் சந்தேகத்தை எழுப்புகிறது. போலீசார் தற்போது பல கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.