இன்று தயிருக்கு தஹி! நாளை சாப்பாட்டுக்கு கானா – அமைச்சர் பொன்முடி கிண்டல்
முதலமைச்சர் எடுத்த நடவடிக்கை காரணமாக தஹி திரும்பப் பெறப்பட்டுள்ளதாக உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் பதிலுரையின் போது பேசிய அமைச்சர் பொன்முடி, தமிழகத்தில் தமிழ் , ஆங்கிலம் என்ற இருமொழிக்கொள்கை இருந்தால் போதும். ஆங்கிலம் இருக்கிற போது இந்தி எல்லாம் தேவையில்லை. தயிரை தஹி என்கிறார்கள். நாளை சாப்பாட்டை கானா என்பார்கள். முதலமைச்சர் எடுத்த நடவ்டிக்கை காரணமாக தான் தஹி திரும்பப்பெறப்பட்டுள்ளதாக கூறினார்.
இதே போல் தால் புதியக்கல்வி கொள்கையில் இந்தியை திணிக்க நினைத்தார்கள், அதனால் தான் புதிய கல்விக்கொள்கையை எதிர்த்து இருமொழி கொள்கையே போதும் என்ற அடிப்படையில் தான் மாநில கல்வி கொள்கை உருவாக்கப்பட்டது என கூறினார்.