தினமும் குழந்தைகளுக்கு இதை எல்லாம் கட்டாயம் கொடுங்கள்!

Photo of author

By Kowsalya

குழந்தைகளுக்கு தினமும் எந்தெந்த மாதிரியான உணவுப் பொருட்கள் கொடுக்க வேண்டும் என்பதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். இதையெல்லாம் குழந்தைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும்.

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கும் மன வளர்ச்சிக்கும் எந்த ஒரு சோர்வையும் தராதவாறு அன்றாடம் ஐந்து உணவுகளை தாய்மார்கள் கொடுக்க வேண்டும்.

பால்:

குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு தினமும் இரண்டு முதல் மூன்று டம்ளர் அளவு பால் கொடுக்கலாம். பாலில் உள்ள புரதச்சத்துக்கள் குழந்தைகளுக்கு எலும்பு வலுவை தருகிறது. பாலில் உள்ள கொழுப்பு கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற பொருட்கள் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துக்களை அளித்து வலு பெற உதவுகிறது.

முட்டை:

குழந்தைகளின் ஊட்டச்சத்துக்காக நாள் முழுவதும் வளர்ச்சிக்காக ஒரு நாட்டு முட்டை கொடுக்க வேண்டுமாம். பிராய்லர் கோழி முட்டைகளை தவிர்த்து விட்டு நாட்டுக்கோழி முட்டைகளை வாங்கி குழந்தைகளுக்கு கொடுங்கள். முட்டையில் புரதச்சத்து அதிகமாக உள்ளதால் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது.

பருப்பு:

பருப்பு வகைகளை தினமும் குழந்தைகளின் உணவில் சேர்க்க வேண்டும் என்பது மருத்துவர்கள் தாய்மார்களுக்கு கூறும் அறிவுரை. ஏனென்றால் பருப்பில் புரதம் மற்றும் வைட்டமின் சத்துக்கள் அதிகமாக உள்ளது அதனால் பருப்பு வகைகளை தினமும் குழந்தைகளின் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.பாதாம் பருப்பு, முந்திரி பருப்பு ஆகியவற்றையும் தினமும் ஒன்று இரண்டு அளவில் கொடுப்பது நல்லது.

உலர் திராட்சை:

குழந்தைகளுக்கு மிகவும் அவசியமாக உலர் திராட்சை கொடுக்க வேண்டும். இந்த உடல் திராட்சை குழந்தைகளின் உடம்பில் ரத்தத்தை சுத்தகரித்து புதிதாக ரத்தத்தை உற்பத்தி செய்ய உதவும்.

வாழைப்பழம்

குழந்தைகள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட வேண்டும் அது குழந்தைகள் என்ன சாப்பிட்டாலும் செரிமானத்திற்கு வாழைப்பழம் மிகவும் உதவுகிறது. வாழைப்பழத்தில் உள்ள பொட்டாசியம் அனைத்து உடல் உறுப்புகளையும் பாதுகாக்கின்றது.

கடைகளில் விற்கப்படும் பாக்கெட்டுகளில் விற்கப்படும் உணவுப் பொருட்களை வாங்கித் தராமல் , தினமும் சத்தான உணவுப் பொருட்களை குழந்தைகளுக்கு கொடுங்கள்.