இன்றைய ராசி பலன் 30-08-2020 Today Rasi Palan 30-08-2020

0
178

இன்றைய ராசி பலன்- 30-08-2020

நாள் : 30-08-2020

தமிழ் மாதம்:

ஆவணி 14, ஞாயிற்றுக்கிழமை,

நல்ல நேரம்:

காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரை, மாலை 3.15 மணி முதல் 4.15 மணி வரை.

இராகு காலம்:

மாலை 4.30 முதல் 6.00 வரை.

 எம கண்டம்:

மதியம் 12.00 முதல் 1.30 வரை.

குளிகன்:

பிற்பகல் 3.00 முதல் 4.30 வரை,

திதி:

துவாதசி திதி காலை 08.22 வரை பின்பு வளர்பிறை திரியோதசி

நட்சத்திரம்:

உத்திராடம் நட்சத்திரம் பகல் 01.52 வரை பின்பு திருவோணம்.

நாள் முழுவதும் அமிர்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. பிரதோஷ விரதம். ஹயக்ரீவர்- சிவ வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வந்து சேரும். குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உடன் பிறந்தவர்களின் ஆதரவு கிட்டும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். வெளியூர் மூலம் நல்ல செய்தி கிடைக்கும்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் தொழில் மற்றும் வியாபாரத்தில் சற்று மந்த நிலை காணப்படும். திடீர் வெளியிட பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் அதிகரிக்கும். உடன் பிறந்தவர்களுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். தடைப்பட்ட சுபகாரியங்கள் கைகூடும். பழைய பாக்கிகள் வசூலாகும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு மனகுழப்பம் ஏற்படும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் நிதானத்துடன் செயல்பட வேண்டும். சுப முயற்சிகளை தள்ளி வைப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவர்களிடம் பேசுவதை தவிர்த்தால் பிரச்சினைகள் குறையும். உடல்நிலையில் கவனம் தேவை.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். சிலருக்கு புதிய சொத்துக்கள் வாங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். புதிய செயல்களை தொடங்க அனுகூலமான நாளாகும். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகமாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று உங்கள் பிரச்சினைகள் தீர்ந்து சந்தோஷம் கூடும். பெரியோர்களின் நன்மதிப்பிற்கு ஆளாவீர்கள். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சுபகாரிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். வியாபாரத்தில் சிறுசிறு மாறுதல்கள் செய்வதால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்கள்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்கள் மனதில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். உடன்பிறந்தவர்கள் அனுகூலமாக இருப்பார்கள். சிலருக்கு புதிய வேலை வாய்ப்பு அமையும். உறவினர்களால் மகிழ்ச்சி தரும் செய்திகள் கிட்டும். திருமண முயற்சிகள் தொடங்க நல்ல அனுகூலமான நாளாகும். பிள்ளைகளால் பெருமை அடைவீர்கள்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று பிள்ளைகளின் தேவைக்காக சிறு தொகையை செலவிட நேரிடும். உறவினர்களுடன் சிறு மனஸ்தாபங்கள் ஏற்படலாம். சிக்கனமாக செயல்படுவதன் மூலம் பணப்பிரச்சினையை தவிர்க்கலாம். தெய்வ வழிபாடு மனதிற்கு நிம்மதியை தரும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் உங்களுக்கு பணவரவு தாரளமாக இருக்கும். குடும்பத்தில் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வியாபாரம் சம்பந்தமாக வெளியிட பயணம் செல்ல நேரிடும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் வழியில் சுப செய்திகள் வரும். செலவுகள் குறையும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு பணவரவு தாராளமாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படலாம். பழைய நண்பர்களை சந்திப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். வியாபார வளர்ச்சிக்காக நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் உடன் பிறந்தவர்களுடன் மனஸ்தாபங்கள் ஏற்படும். பிள்ளைகளால் வீண் செலவுகள் உண்டாகலாம். பெண்களுக்கு வீட்டில் வேலைபளு அதிகரிக்கும். குடும்ப பிரச்சினைகளுக்கு உறவினர்கள் வழியில் அனுகூலம் கிட்டும். வியாபாரத்தில் உள்ள மந்த நிலை சற்று குறையும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சினைகளால் ஒற்றுமை குறைந்து காணப்படும். பிள்ளைகள் மூலம் வீண் செலவுகள் ஏற்படலாம். சுபகாரிய முயற்சிகளில் சில தடங்கலுக்குப் பின் முன்னேற்றம் உண்டாகும். குடும்பத்தில் உள்ளவர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்றைய நாள் புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியிட பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். சேமிக்கும் அளவிற்கு வருமானம் பெருகும்.

 

 

Previous articleகரீபியன் லீக் : 110 ரன்களுக்கு சுருண்ட செயின்ட் கிட்ஸ் அணி
Next articleஇங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான இரண்டாவது 20 ஓவர் போட்டி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here