கரீபியன் லீக் : 110 ரன்களுக்கு சுருண்ட செயின்ட் கிட்ஸ் அணி

0
186

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

அந்த வகையில் மேற்கு இந்திய தீவு அணியில் நடைபெறும் கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. நேற்று நடந்த மற்றும் ஒரு ஆட்டத்தில் செயின்ட் கிட்ஸ் அணியும், ஜமைக்கா அணியும் மோதின. டாஸ் வென்ற ஜமைக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஜமைக்கா அணி 6 விக்கெட் இழந்து 147 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக பிலிப்ஸ் 79 ரன்கள் அடித்தார். பின்னர் களமிறங்கிய செயின்ட் கிட்ஸ் அணி 110 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் ஜமைக்கா அணி வெற்றி பெற்றது.

Previous articleகொரோனா நோயாளிகள் புகார்: கழிவறையை சுத்தம் செய்த சுகாதாரத்துறை அமைச்சர்!!
Next articleஇன்றைய ராசி பலன் 30-08-2020 Today Rasi Palan 30-08-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here