வரலாறு காணாத பெட்ரோல், டீசல் விலை உயர்வு.!! இன்றைய விலை நிலவரம்.!!

0
280

சென்னையில் தொடர்ந்து கடந்த சில நாளாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து வருகிறது. அந்த வகையில் இன்றும் பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ளது.

உலகளாவிய சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் டீசல் விலையை மாற்றியமைத்து வருகின்றன. அதன்படி, கடந்த சில நாட்களாக பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. அதன் காரணமாக தற்போது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பெட்ரோல் விலை ரூ.100 தாண்டியுள்ளது.

இந்நிலையில் தமிழக அரசின் பட்ஜெட் அறிவிப்பையடுத்து லிட்டருக்கு ரூ.3 விலைகுறைப்பு அமலுக்கு வந்தது. இதனைத்தொடர்ந்து பெட்ரோல் லிட்டருக்கு 21 காசுகள் உயர்ந்து ரூ.99.36 க்கும், டீசல் லிட்டருக்கு 28 காசுகள் உயர்ந்து ரூ.94.45க்கும் விற்பனையானது.

சென்னையில் நேற்று பெட்ரோல் விலை லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ.106.04க்கும், டீசல் விலை லிட்டருக்கு 33 காசுகள் அதிகரித்து ரூ.102.25க்கும் விற்பனை செய்யப்பட்ட நிலையில்,

இன்று, பெட்ரோல் விலை லிட்டருக்கு 31 காசுகள் அதிகரித்து ரூ.106.35க்கும், மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 34 காசுகள் அதிகரித்து ரூ.102.59க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.  பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது வாகன ஓட்டிகளிடையே கடும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

 

Previous articleஇன்றைய (01-11-2021) ராசி பலன்கள்.!! யாருக்கு வரவு.? யாருக்கு உயர்வு.?
Next articleமாதாந்திர மின் கட்டணம் தொடர்பாக கேள்வி எழுப்பிய பத்திரிக்கையாளர்கள்! அந்த பதில்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here