இன்றைய (03-11-2021) ராசி பலன்கள்.!! இன்று இந்த ராசிக்காரர்களுக்கு மகிழ்ச்சியான நாள்.!!

0
231

 

இன்றைய (03-11-2021) ராசி பலன்கள்

மேஷம்

மனதில் இருந்துவந்த கவலைகள் குறையும். தனவரவுகளின் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே புரிதல் மேம்படும். நண்பர்களின் உதவியால் முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். வெளியூர் செல்லும் வாய்ப்பு சிலருக்கு அமையும். கொடுக்கல், வாங்கல் சம்பந்தமான பணிகளில் லாபகரமாக சூழல் ஏற்படும். மகிழ்ச்சியான நாள்.

ரிஷபம்

கூட்டாளிகளின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிரபலமானவர்களின் நட்பு நல்ல மாற்றத்தை ஏற்படுத்தும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். நிலுவையில் இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கும். பிள்ளைகளின் படிப்பில் முன்னேற்றமான சூழ்நிலைகள் காணப்படும். பயணங்களால் புதுவிதமான அனுபவம் உண்டாகும். மாற்றம் நிறைந்த நாள்.

மிதுனம்

சிக்கலான செயல்களையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பயணங்களால் அனுகூலமான சூழல் உண்டாகும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். உறவினர்களால் அலைச்சல்கள் ஏற்படலாம். மனதிற்கு பிடித்தவர்களிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் குறையும். கற்பனை சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். திறமைகள் வெளிப்படும் நாள்.

கடகம்

உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கப் பெறுவீர்கள். வியாபாரத்தில் பணியாட்களால் சாதகமான சூழல் உண்டாகும். கடன் சார்ந்த நெருக்கடிகள் குறையும். திட்டமிட்ட காரியங்கள் நிறைவேறும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் குறையும். சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் முயற்சிகள் ஈடேறும். ஒத்துழைப்பு நிறைந்த நாள்.

சிம்மம்

புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். வீட்டுத் தேவைகளை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். வியாபாரம் தொடர்பான பணிகளில் இருந்துவந்த போட்டிகள் குறையும். உடன்பிறந்தவர்களின் மூலம் ஆதாயம் ஏற்படும். புதுவிதமான துறைகளின் மீது ஆர்வம் உண்டாகும். விளையாட்டு தொடர்பான செயல்பாடுகளில் ஈடுபாடு அதிகரிக்கும். கலகலப்பான நாள்.

கன்னி

ஆன்மிகம் தொடர்பான பணிகளில் ஈடுபாடு உண்டாகும். புதிய தொழில் நுட்பம் சார்ந்த பொருட்களை பற்றிய ஆர்வம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத சில மாற்றமான சூழல் ஏற்படும். பொருளாதார தேவைகள் ஓரளவு பூர்த்தியாகும். நண்பர்களின் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் காலதாமதம் உண்டாகும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

துலாம்

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த மனவருத்தங்கள் நீங்கும். இனிமையான பேச்சுக்களின் மூலம் சாதகமான பலன்கள் உண்டாகும். தொழில், வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். ஆடம்பரமான விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களுடன் பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் ஈடுபட்டு மனம் மகிழ்வீர்கள். புதிய பொருட்சேர்க்கை உண்டாகும். புதுமையான நாள்.

விருச்சிகம்

நெருக்கமானவர்களின் ஆதரவால் சில காரியங்களை செய்து முடிப்பீர்கள். பூர்வீக சொத்துக்களில் எதிர்பார்த்திருந்த ஆதாயம் உண்டாகும். உடன்பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். வெளியூர் தொடர்பான பயண வாய்ப்புகளில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். நீண்ட நாட்களாக மனதை உறுத்தி வந்த பிரச்சனைகளுக்கு தீர்வும், விடுதலையும் ஏற்படும். ஒத்துழைப்பு நிறைந்த நாள்.

தனுசு

குடும்ப உறுப்பினர்களின் மூலம் சாதகமான சூழ்நிலைகள் உண்டாகும். உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் விழிப்புணர்வு வேண்டும். வாகனம் தொடர்பான பயணங்களில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். கடன் சார்ந்த இன்னல்கள் குறையும். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். பொறுப்புகள் மேம்படும் நாள்.

மகரம்

வியாபாரம் தொடர்பான பணிகளில் உள்ள நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதியான சூழ்நிலைகள் அமையும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். உறவினர்களின் உதவியால் எடுக்கும் முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் மேம்படும். புத்துணர்ச்சியான சிந்தனைகள் உண்டாகும். உயர்கல்வி தொடர்பான தெளிவுகள் ஏற்படும். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.

கும்பம்

பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளிடம் பொறுமையுடன் செயல்பட வேண்டும். வியாபாரம் தொடர்பான எண்ணங்களினால் அலைச்சல்கள் அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல் தொடர்பான விஷயங்களில் கவனம் வேண்டும். எண்ணிய சில பணிகள் முடிவதில் காலதாமதம் உண்டாகும். புதுவிதமான ஆடைகள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். சிந்தித்து செயல்பட வேண்டிய நாள்.

மீனம்

திடீர் தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உண்டாகும். பெரியவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். மனதிற்கு பிடித்த உணவுகளை உண்டு மகிழ்வீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் அமையும். உடனிருப்பவர்களின் ஒத்துழைப்பால் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். வாய்ப்புகள் கிடைக்கும் நாள்.

Previous articleதமிழக அரசு வெளியிட்ட ஆணை! மகிழ்ச்சியில் தென்காசி மக்கள்!
Next articleநேற்றைய விலையில் பெட்ரோல், டீசல் விலை.!! இன்றைய (நவ-03) விலை நிலவரம்.!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here