இன்றைய (30-10-2021) ராசி பலன்கள்.!! விருப்பங்கள் நிறைவேறும் ராசிகள்.!!

Photo of author

By Vijay

 

இன்றைய (30-10-2021) ராசி பலன்கள்

மேஷம்

எந்தவொரு செயலிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது. மற்றவர்களின் செயல்பாடுகளில் தலையிடாமல் இருக்கவும். கடன் தொடர்பாக எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கப் பெறுவீர்கள். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் ஏற்பட்டு மறையும். தாய்மாமன் உறவுகளிடம் சற்று பொறுமையுடன் நடந்து கொள்ளவும். விருப்பங்கள் நிறைவேறும் நாள்.

ரிஷபம்

வாக்குவன்மையின் மூலமாக ஆதரவான வாய்ப்புகள் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதுவிதமான அனுபவம் உண்டாகும். உத்தியோக பணிகளில் இருந்துவந்த பொறுப்புகள் குறையும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை அறிந்து நிறைவேற்றி வைப்பீர்கள். கலை சார்ந்த செயல்பாடுகளின் மீது ஆர்வம் அதிகரிக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும் நாள்.

மிதுனம்

இழுபறியாக இருந்துவந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சிறு தூர பயணங்களின் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். வாழ்க்கைத்துணைவரின் ஆதரவு கிடைக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். அக்கம்-பக்கம் இருப்பவர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.வெற்றிகரமான நாள்.

கடகம்

செயல்பாடுகளில் திறமைகள் வெளிப்படும். விளையாட்டு தொடர்பான விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப உறுப்பினர்களின் மூலம் திருப்தியான சூழ்நிலைகள் உண்டாகும். நேரம் தவறி உணவு உட்கொள்வதை தவிர்ப்பது நல்லது. பேச்சுக்களால் வரவு மேம்படும் நாள்.

சிம்மம்

மனதளவில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பொருளாதாரம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த சில காரியங்கள் காலதாமதமாக நிறைவு பெறும். நபர்களின் தன்மைகளை அறிந்து உதவி செய்யவும். மாற்றங்கள் உண்டாகும் நாள்.

கன்னி

பொருளாதாரம் தொடர்பான விஷயங்களில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலைகள் உண்டாகும். குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். அலுவலக பணிகளில் பொறுப்புகள் குறையும். நண்பர்களின் ஒத்துழைப்பு மனதில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தும். எதிர்பாராத திடீர் பயணங்களின் மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். இறைநம்பிக்கை மேம்படும் நாள்.

துலாம்

வியாபார பணிகளில் ஒத்துழைப்பும், ஆதரவும் கிடைக்கப் பெறுவீர்கள். சுபகாரியம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் சாதகமாக நிறைவு பெறும். ஆன்மிக பணிகளில் ஈடுபாடு உண்டாகும். வியாபார ரீதியான பயணங்களின் மூலம் நன்மைகள் ஏற்படும். சமூகம் தொடர்பான பணிகளில் இருப்பவர்களுக்கு பலதரப்பட்ட மக்களின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

விருச்சிகம்

உத்தியோக பணிகளில் உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் வழியில் சுபச்செய்திகள் உண்டாகும். புதுவிதமான பொருட்களின் மீது ஆர்வம் ஏற்படும். வழக்கு சம்பந்தமான பணிகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். இழுபறியாக இருந்துவந்த தனவரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். வாகன பயணங்களில் நிதானம் வேண்டும். பொறுப்புகள் மேம்படும் நாள்.

தனுசு

குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். வாழ்க்கைத்துணைவரின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். ஆராய்ச்சி தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான ஆசைகள் உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும் நாள்.

மகரம்

தந்தை வழி உறவுகளிடம் அனுசரித்து செல்லவும். உயர் அதிகாரிகளிடம் சூழ்நிலைக்கேற்ப விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் அலைச்சல்கள் உண்டாகும். கல்வி தொடர்பான விஷயங்களில் ஆர்வமின்மையான சூழ்நிலைகள் காணப்படும். உடல் ஆரோக்கியத்தில் விழிப்புணர்வு வேண்டும். தடைகள் நிறைந்த நாள்.

கும்பம்

திட்டமிட்ட காரியங்கள் எண்ணிய விதத்தில் நிறைவேறும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பாராத அலைச்சல்கள் உண்டாகும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். வியாபார பணிகளில் லாபம் மேம்படும். உயர்வுகள் கிடைக்கும் நாள்.

மீனம்

புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உத்தியோக பணிகளில் பாராட்டுகள் கிடைக்கப் பெறுவீர்கள். தனவரவுகளை மேம்படுத்துவீர்கள். வாழ்க்கைத்துணைவரின் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். நெருக்கமானவர்களிடம் சற்று பொறுமையுடன் நடந்து கொள்ளவும். சஞ்சலம் நிறைந்த நாள்.