இன்றைய ராசி பலன் 04-09-2020 Today Rasi Palan 04-09-2020

0
71

இன்றைய ராசி பலன்- 04-09-2020

நாள் : 04-09-2020

தமிழ் மாதம்:

ஆவணி 19, வெள்ளிக்கிழமை

நல்ல நேரம்:

காலை 9.00 மணி முதல் 10.00 மணி வரை, மாலை 4.45 மணி முதல் 5.45 மணி வரை.

இராகு காலம்:

பகல் 10.30 முதல் 12.00 வரை.

 எம கண்டம்:

மதியம் 3.00 முதல் 4.30 வரை.

குளிகன்:

காலை 7.30 முதல் 9.00 வரை,

திதி:

துதியை திதி பகல் 02.04 வரை பின்பு தேய்பிறை திரிதியை.

நட்சத்திரம்:

உத்திரட்டாதி நட்சத்திரம் இரவு 11.28 வரை பின்பு ரேவதி.

நாள் முழுவதும் சித்தயோகம். நேத்திரம் – 2. ஜீவன் – 1. அம்மன் வழிபாடு நல்லது. சுபமுகூர்த்த நாள். சகல சுபமுயற்சிகளை செய்ய ஏற்ற நாள்.

மேஷம்

மேஷ ராசிக்காரர்களே இன்று எந்த வேலையிலும் சுறுசுறுப்பின்றி செயல்படுவீர்கள். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையில்லாத செலவுகளால் கடன்கள் வாங்க நேரிடும். உடனிருப்பவர்களை அனுசரித்து சென்றால் தொழிலில் லாபம் கிடைக்கும். உற்றார் உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்களே இன்றைய நாள் குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். ஆரோக்கியத்தில் சற்று கவனம் செலுத்துவது நல்லது. வாகனங்களால் வீண் செலவுகள் ஏற்படலாம். தொழிலில் இருந்த மந்த நிலை நீங்கி ஓரளவு முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களால் வேலைபளு சற்று குறையும்.

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களே இன்று உங்களுக்கு வரவை காட்டிலும் செலவுகள் அதிகமாகும். வியாபார ரீதியான நெருக்கடிகளை சமாளிக்க கடன்கள் வாங்க நேரிடும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். உறவினர்கள் உங்கள் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

கடகம்

கடக ராசிக்காரர்களே இன்றைய நாள் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சில இடையூறுகள் உண்டாகலாம். வியாபார ரீதியாக எதிர்பாராத செலவுகள் ஏற்படும். உடன் பிறப்பிடம் ஒற்றுமை குறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையில் மேலதிகாரிகளை அனுசரித்து செல்வதன் மூலம் அனுகூலம் உண்டாகும்.

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களே இன்று பிள்ளைகளால் மனமகிழ்ச்சி தரும் செய்திகள் வீடு வந்து சேரும். குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். பெண்கள் தம் பொறுப்பறிந்து நடந்து கொள்வார்கள். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் நற்பலன்களை தரும். பொன் பொருள் வாங்கும் வாய்ப்பு அமையும்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களே இன்றைய நாள் நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் செல்லும் வாய்ப்பு அமையும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகள் நற்பலனை தரும். திருமண தடைகள் விலகும். ஆன்மீக தெய்வீக வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

துலாம்

துலா ராசிக்காரர்களே இன்று குடும்பத்தில் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் தோன்றும். பிள்ளைகள் வழியில் மருத்துவ செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் கூட்டாளிகளை அனுசரித்து செல்வது நல்லது. சிந்தித்து செயல்பட்டால் வீண் செலவுகளை தவிர்க்கலாம். தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே இன்றைய நாள் நீங்கள் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படுவீர்கள். எளிதில் முடிய கூடிய காரியங்கள் கூட காலதாமதமாகும். உங்கள் ராசிக்கு சிக்கல்கள் இருப்பதால் வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது.

தனுசு

தனுசு ராசிக்காரர்களே இன்று புதிய தொழில் தொடங்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும். வேலை விஷயமாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும். உறவினர்கள் வருகையால் குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பெரிய மனிதர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும். இதுவரை வராத பழைய பாக்கிகள் வசூலாகும்.

மகரம்

மகர ராசிக்காரர்களே இன்றைய நாள் நீங்கள் எந்த செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். பணவரவு தாராளமாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை உருவாகும். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து சேரும்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களே இன்று இல்லத்தில் மனமகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். சிலருக்கு வெளியூரிலிருந்து புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலப்பலன் உண்டாகும்.

மீனம்

மீன ராசிக்காரர்களே இன்றைய நாள் நீங்கள் செய்ய நினைக்கும் செயல்களில் சில இடையூறுகள் ஏற்படலாம். குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறு சிறு மனவருத்தங்கள் ஏற்படும். தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வேலையில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

 

 

 

 

 

 

author avatar
Kowsalya