கரீபியன் லீக் : மழையின் காரணமாக ஆட்டம் பாதிப்பு

0
178

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி மனித இனத்துக்கே பெரிய சோகத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் இந்த வைரஸால் சேவைகள் அனைத்தும் முடக்கத்தில் உள்ளன அந்த வகையில் அனைத்து வித போட்டிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கடந்த மூன்று மாதங்களாக எந்த வித போட்டியும் நடக்காத நிலையில் இங்கிலாந்தில் மட்டும் ரசிகர்கள் யாரும் இன்றி போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன.  ஏற்கனவே இங்கிலாந்து – வெஸ்ட் இண்டிஸ் அணி தொடர் முடிந்த நிலையில் தற்போது இங்கிலாந்து – பாகிஸ்தான் இடையான மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகள் கொண்ட தொடர் நடந்து வருகிறது.

அந்த வகையில் மேற்கு இந்திய தீவு அணியில் நடைபெறும் கரீபியன் லீக் 20 ஓவர் போட்டி நடந்து வருகிறது. இன்று ஜமைக்கா அணியும், செயின்ட் கிட்ஸ் அணியும் மோதுகின்றன. இந்திய நேரப்படி இரவு 7.30 க்கு தொடங்கியது. டாஸ் வென்ற ஜமைக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய செயின்ட் கிட்ஸ் அணி 5.4 ஓவருக்கு 46 ரன்கள் எடுத்த நிலையில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தடைப்பட்டது. தொடக்க வீரர்களான லூயிஸ் 21 ரன்களும், கிரிஸ் லின் 23 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

Previous articleஐ.பி.எல். தொடர் நாளை அறிவிக்க போகும் உற்சாகமான செய்தி
Next articleஇன்றைய ராசி பலன் 04-09-2020 Today Rasi Palan 04-09-2020

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here