இந்த ராசிக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 19-01-2021 Today Rasi Palan 19-01-2021

Photo of author

By Kowsalya

இந்த ராசிக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 19-01-2021 Today Rasi Palan 19-01-2021

Kowsalya

 

இன்றைய ராசி பலன்- 19-01-2021,

நாள் : 19-01-2021,

தமிழ் மாதம்:

தை 06, செவ்வாய்க்கிழமை

 சுப ஹோரைகள்

காலை 8.00-9.00, மதியம் 12.00-01.00, மாலை 04.30-05.00, இரவு 07.00-08.00, 10.00-12.00.

இராகு காலம்:

மதியம் 03.00-04.30,

எம கண்டம்:

காலை 09.00-10.30

குளிகன்:

மதியம் 12.00-1.30,

திதி:

சஷ்டி திதி பகல் 10.59 வரை பின்பு வளர்பிறை சப்தமி

நட்சத்திரம்:

உத்திரட்டாதி நட்சத்திரம் காலை 09.54 வரை பின்பு ரேவதி.

அமிர்தயோகம் காலை 09.54 வரை பின்பு சித்தயோகம். நேத்திரம் – 1. ஜீவன் – 1/2. முருக வழிபாடு நல்லது.

 

மேஷம்

 

மேஷ ராசிக்காரர்களே உத்தியோகத்தில் சக ஊழியர்களிடம் தேவையில்லாத பிரச்சினைகள் தோன்றும். வண்டி வாகனங்களால் வீண் விரயங்கள் ஏற்படலாம். பயணங்களில் கவனம் தேவை. எந்த விஷயத்திலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது. உற்றார் உறவினர்கள் வழியில் அனுகூலங்கள் உண்டாகும்.

 

ரிஷபம்

 

ரிஷப ராசிக்காரர்களே நீங்கள் எந்த காரியத்தையும் பொறுப்புடன் செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை உருவாகும். பிள்ளைகளின் படிப்பில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் ஊழியர்களுடன் சுமூக உறவு உண்டாகும். உடன் பிறந்தவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.

 

மிதுனம்

 

மிதுன ராசிக்காரர்களே பிள்ளைகளால் இல்லத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். நண்பர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிட்டும். வேலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தெய்வ தரிசனத்திற்காக வெளியூர் பயணம் செல்வீர்கள். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும்.

 

கடகம்

 

கடக ராசிக்காரர்களே உங்களுக்கு குடும்பத்தினரின் மாற்று கருத்தால் மனசங்கடங்கள் ஏற்படலாம். பொருளாதார நிலை சுமாராக இருக்கும். ஆடம்பர செலவுகளை குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் சிலருக்கு எதிர்பார்த்த இடமாற்றம் கிட்டும். வெளியில் இருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்து சேரும்.

 

சிம்மம்

 

சிம்ம ராசிக்காரர்களே உங்களுக்கு மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்களிடம் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். சுப முயற்சிகளை தவிர்ப்பது நல்லது. வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

 

கன்னி

 

கன்னி ராசிக்காரர்களே உத்தியோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சுபகாரியங்களில் இருந்த மந்த நிலை நீங்கி முன்னேற்றம் ஏற்படும். ஆடம்பர பொருட் சேர்க்கை உண்டாகும். குடும்பத்தில் ஒற்றுமை பலப்படும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை கொடுக்கும். பணவரவு சிறப்பாக இருக்கும்.

 

துலாம்

 

துலா ராசிக்காரர்களே உறவினர்கள் வருகையால் மகிழ்ச்சி அதிகரிக்கும். சுபமுயற்சிகளில் சாதகமான பலன் ஏற்படும். தொழில் வளர்ச்சிக்காக எதிர்பார்த்த கடன் தொகை கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடும். திடீர் பணவரவு உண்டாகும். கடன் பிரச்சினைகள் ஓரளவு குறையும்.

 

விருச்சிகம்

 

விருச்சிக ராசிக்காரர்களே தொழிலில் கூட்டாளிகளுடன் மனக்கசப்பு ஏற்படலாம். சுபமுயற்சிகளில் அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும். தேவையற்ற செலவுகளால் சேமிப்பு குறையும். எடுக்கும் முயற்சிகளுக்கு பெரிய மனிதர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் கிடைக்கும். நண்பர்களின் உதவியால் பணப்பிரச்சினைகள் சற்று குறையும்.

 

தனுசு

 

தனுசு ராசிக்காரர்களே உங்களுக்கு பொருளாதார நிலை சுமாராக இருக்கும். உறவினர்களால் சுபசெலவுகள் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். தொழில் வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். தெய்வ வழிபாட்டில் ஈடுபாடு அதிகரிக்கும்.

 

மகரம்

 

மகர ராசிக்காரர்களே குடும்பத்தில் சுபசெலவுகள் செய்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் உள்ளவர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். உத்தியோகஸ்தர்களின் திறமைகள் உயர் அதிகாரிகளால் பாராட்டப்படும். வருமானம் பெருகும்.

 

கும்பம்

 

கும்ப ராசிக்கு நீங்கள் செய்யும் செயல்களில் காலதாமதம் ஏற்படலாம். குடும்பத்தினருடன் செல்லும் பயணங்களில் அலைச்சல் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன்கள் உண்டாகும். வியாபாரத்தில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை நிலவும்.

 

மீனம்

 

மீனம் ராசிக்கு உறவினர்கள் மூலம் சுபசெய்திகள் வந்து சேரும். பிள்ளைகள் சிறப்புடன் இருப்பார்கள். தொழில் சம்பந்தமான வெளியூர் பயணங்களால் முன்னேற்றங்கள் உண்டாகும். பெரியோர்களின் சந்திப்பு மனதிற்கு மகிழ்ச்சியை தரும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்த்த உயர்வுகள் கிட்டும்.