உங்களுக்கு எண்ணெய் வடியும் முகம் உள்ளதா? அல்லது ரொம்ப வறண்ட சருமமாக உள்ளதா? இந்த முறையைப் பயன்படுத்தி தீர்வைக் காணுங்கள்.
ஒரு சிலருக்கு எண்ணெய் வடியும் சருமம் மிகவும் பிசு பிசு என்று இருக்கும். இதனால் முகப்பருக்கள் வந்துவிடும். வறண்ட சருமமாக இருந்தாலும் முகம் பொலிவின்றி காணப்படும். இரண்டுக்கும் ஒரே தீர்வு முறையை இப்பொழுது காணப் போகின்றோம்.
தேவையான பொருட்கள்:
1. கிரீன் டீ ஒரு பாக்கெட்
2. தயிர் 4 ஸ்பூன்
3. முல்தானிமெட்டி 1 ஸ்பூன்.
செய்முறை:
1. முதலில் ஒரு கண்ணாடி பாட்டிலை எடுத்துக் கொள்ளவும்.
2. அதில் ஒரு பாக்கெட் அளவுக்கு கிரீன் டீ துளை போடவும். அது எந்தவகையான கிரீன் டீ ஆக இருந்தாலும் பரவாயில்லை.
3. பிறகு பாட்டிலில் 4 ஸ்பூன் அளவுக்கு தயிரை ஊற்றவும்.
4. நன்கு கலந்து கொள்ளவும்.
5. இப்பொழுது முக்கால் ஸ்பூன் அளவு முல்தானி மெட்டி பொடியை போட்டு நன்றாக கலந்து கொள்ளவும்.
6. இதனை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து முகம் முழுவதும் தேய்த்து மேல்வாக்கில் நன்றாக தேய்த்துவிட வேண்டும்.
7. இதை 25 நிமிடங்கள் கழித்து கழுவி விட வேண்டும்.
8. கழுவிய பின் நீங்களே உங்கள் மாற்றத்தை உணர்வீர்கள்.
9. இரவு முழுவதும் வைத்திருக்க வேண்டாம்.
10. கண்ணாடி பாட்டில்களில் சேமித்து வைத்துக் கொண்டு தொடர்ந்து நீங்கள் ஒரு ஸ்பூன் அளவிற்கு இதனைப் பயன்படுத்தி வரும் பொழுது உங்கள் முகம் பளிச்சென்று மாறுவதை காணலாம்.