“அவர் இந்தியாவின் டிவில்லியர்ஸ்…” இந்திய வீரரைப் புகழ்ந்த தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர்!

0
243

“அவர் இந்தியாவின் டிவில்லியர்ஸ்…” இந்திய வீரரைப் புகழ்ந்த தென் ஆப்பிரிக்கா முன்னாள் வீரர்!

இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் சமீபகாலமாக சிறப்பான பேட்டிங் டச்சில் இருந்து வருகிறார்.

சமீபத்தில் நடந்த வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான தொடர் முதல், ஆஸி மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான தொடர் வரை சிறப்பான பார்மில் இருந்து அசத்தி வருகிறார் சூர்யகுமார் யாதவ்.

இதனால், ஆஸி அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் “சூர்யா மைதானத்தைச் சுற்றி 360 டிகிரி ஸ்கோர் செய்கிறார், அவர் ஏபி டி வில்லியர்ஸ் செய்ததைப் போல ஷாட்களை ஆடி வருகிறார்” என்று கூறி பாராட்டி இருந்தார். ஆனால் வேறு சில முன்னாள்  வீரர்கள் டிவில்லியர்ஸுடன் அவரை ஒப்பிடும் அளவுக்கு இன்னும் அவர் சாதனைகள் படைக்கவில்லை என்று கூறி இருந்தனர். தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருவதால் டி 20 போட்டிகளுக்கான தரவரிசையில் முதல் 10 இடங்களுக்கு இடம்பிடித்தார். இப்போது தென் ஆப்பிரிக்க வீரர் டேல் ஸ்டெயினும் ரிக்கி பாண்டிங்கின் கருத்தை ஆமோதிப்பது போல பேசியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெயின் “சூர்யகுமார் யாதவ் பந்தின் வேகத்தைப் பயன்படுத்த விரும்புகிறார். வேகத்தைப் பயன்படுத்தி கீப்பருக்கு பின்பக்கம் விளாச விரும்புகிறார். ஆஸ்திரேலிய மைதானங்களில் பந்து கூடுதல் வேகத்தோடு வரும். சூர்யகுமார் யாதவ்வை நான் டிவில்லியர்ஸோடு பொருத்திப் பார்க்கிறேன். உலகக்கோப்பையில் அனைவராலும் கவனிக்கப்பட கூடிய வீரராக அவர் இருப்பார்.” எனக் கூறியுள்ளார்.

Previous articleஅடிதடி லெவலுக்கு சென்ற வாக்குவாதம்… இளம் வீரருடன் மோதிய சி எஸ் கே வீரர்!
Next articleமின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு தமிழக அரசு ஒப்புதல்! விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here