மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு தமிழக அரசு ஒப்புதல்! விரைவில் வருகிறது அதிரடி மாற்றம்!

0
134

மின் நுகர்வோரின் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இது மிக விரைவில் ஆரம்பமாகும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழக மின்வாரியம் 11 லட்சம் குடிசை வீடுகளுக்கு முழுவதும் 2.22 கோடி வீடுகளுக்கு 100 யூனிட் வரை இலவசமாகவும், 500 யூனிட் வரையில் மானிய விலையிலும் மின்சாரம் வழங்குகிறது இதற்காக வருடத்திற்கு 3650 கோடி செலவு உண்டானது. இந்தத் தொகையை மின்மாரியத்திற்கு தமிழக அரசு மானியமாக வழங்குகிறது.

கடந்த செப்டம்பர் மாதம் 10ஆம் தேதி முதல் மின் கட்டணம் விவரத்தப்பட்டது இதனால் இந்த வருடத்தில் இருந்து வீடுகளுக்கு இலவச மானிய விலை மின்சாரத்திற்கான செலவு 5,572 கோடியாக ரூபாய் அதிகரித்திருக்கிறது.

சொந்த வீடு வைத்திருக்கும் சிலர் வாடகைதாரர்களிடம் இலவச மற்றும் மானிய விலை மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 10 ரூபாய்க்கு மேல் கட்டணம் வசூலிக்கிறார்கள். இதனால் வாடகைதாரர்கள் பாதிக்கப்படுகிறார்கள். இதைத் தவிர அரசியல்வாதிகள் பண பலம் வாய்ந்தவர்கள் உள்ளிட்டோர் இலவச மின்சார சலுகை பெறுவதற்காக ஒரே வீட்டிற்கு 3 அல்லது 4 மின்சார இணைப்புகளை பெற்றுள்ளார்கள்.

அத்துடன் விதிகளை மீறி, கூடுதல் தளங்களை எழுப்பி ஒரே வீட்டிற்கு அதிக மின் இணைப்புகளை வாங்கியுள்ளார்கள். அந்த வீடுகளில் ஒட்டுமொத்தமாக அதிக மின்சாரம் பயன்படுத்தினாலும், தனித்,தனி மீட்டர் இருப்பதால் ஒவ்வொரு இணைப்பிற்கும் 100 யூனிட் இலவசம், 500 யூனிட் வரையில் மானிய பிரிவில் வந்து விடுவதால் குறைந்த கட்டணம் வருகிறது.

ஆகவே தமிழக அரசுக்கு பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. மானிய விலையில் சமையல் கேஸ் சிலிண்டர் வழங்கப்பட்டதை பயன்படுத்தி, சிலர் ஒரே பெயரில் பல காஸ் இணைப்புகளை பெற்றிருந்தார்கள். அவர்கள் குறைந்த விலைக்கு சிலிண்டர் வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்தனர்.

சிலிண்டர் மானியத்தில் முறைகேட்டையை தடுக்கும் விதமாக மத்திய அரசு கடந்த 2014 ஆம் ஆண்டில் பயனாளிகளின் ஆதார் எண்ணை வங்கி கணக்கு எண்ணுடன் இணைத்தது. ஆகவே ஒரே பெயரில் பல இணைப்புகள் ரத்து செய்யப்பட்டனர்.

இதனையடுத்து மத்திய அரசு மானியம் வழங்கக்கூடிய திட்டங்களில் முறைகேட்டை தடுப்பதற்கு பயனாளிகளின் ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட திட்டங்களுடன் இணைக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பித்தது.

தமிழகத்தில் காகித ரேஷன் கார்டுகள் புழக்கத்தில் இருந்த போது, ஒரே நபர் பல முகவரிகளில் பத்துக்கு மேற்பட்ட கார்டுகளை வாங்கினர். ரேஷன் பொருட்களை வாங்கி கள்ள சந்தையில் விற்பனை செய்து பணம் சம்பாதித்தார்கள்.

இதனை தடுப்பதற்காக கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் ஆதார் எண்ணுடன் கூடிய சுமார் ரேஷன் கார்டு வழங்கப்படுவதால் ஒரே நபர் வேறு முகவரியில் கார்டு வாங்க இயலாது. மற்ற கார்களிலும் உறுப்பினராக இணைய முடியாது. தமிழக அரசின் ஒட்டு மொத்த மானியத்திட்டங்களின் செலவுகளில் முதலிடத்தில் இலவசம் மின்சாரம் தான் இருக்கிறது. அதனை தொடர்ந்து உணவு மானிய செலவு இருக்கிறது. ஆகவே ரேஷன் கார்டை தொடர்ந்து, இலவச மின்சாரத்தில் முறைகேட்டை தடுப்பதற்காக ஆதார் எண்ணுடன் மின் இணைப்பு எண்ணை இணைக்க முடிவு செய்யப்பட்டது.

இதற்காக இந்த வருடம் ஆரம்பத்தில் தமிழக அரசிடம் மின்வாரியம் அனுமதி கேட்டது. சிலரின் முட்டுக்கட்டை காரணமாக அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுடன் ஆய்வு கூட்டம் மேற்கொண்டார்.

அப்போது அவர் வழங்கிய பேட்டியில் வடகிழக்கு பருவ மழையை சமாளிப்பதற்காக 14,442 டிரான்ஸ்பார்மர்கள் 1.51 லட்சம் கம்பங்கள் 12,780 கிலோமீட்டர் மின்கம்பி, போன்ற சாதனங்கள் இருப்பில் வைக்கப்பட்டுள்ளனர் மழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயாராக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

மழை சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சியாளர்களுடன் இணைந்து செய்வதற்கு மின்வாரிய அதிகாரிகள் இடம் பெற்றுள்ள சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளனர். மின் நுகர்வோரின் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது இந்த பணி மிக விரைவில் ஆரம்பமாகும் என்று தெரிவித்துள்ளார்.