உணவின் சுவையை கூட்டும் பூண்டு உடல் ஆரோக்கியத்திற்கு சிறந்த மூலிகையாக திகழ்கிறது.பூண்டு சேர்க்கப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
பூண்டில் இருக்கின்ற பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உடலில் தொற்றுநோய் ஏற்படுவதை தடுக்கிறது.தினமும் ஒரு பூண்டு பல்லை பச்சையாக சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.
உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரைக்கும் ஆற்றல் பூண்டில் இருக்கிறது.பூண்டு பற்களை பச்சையாக சாப்பிட விரும்பாதவர்கள் ஒரு கிளாஸ் சூடான நீரில் கலந்து பருகலாம்.அதேபோல் பூண்டு பற்களை பாலில் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்கலாம்.
ஆஸ்துமா,இருமல் போன்ற பிரச்சனைகளுக்கு பூண்டு பற்களை இடித்து சாறு எடுத்து தேன் கலந்து அருந்தலாம்.தினமும் ஒரு பூண்டு பல் சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு கட்டுப்படும்.
இதய அடைப்பு,இதய படபடப்பு போன்ற இதயம் சம்மந்தபட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிடலாம்.குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்கள் நீங்க பூண்டு பற்களை சாப்பிடலாம்.
செரிமான ஆரோக்கியம் மேம்பட பூண்டு பற்களை பச்சையாக சாப்பிடலாம்.மூளை ஆரோக்கியம் மேம்பட நினைவாற்றல் பெருக தினமும் ஒரு கிளாஸ் பூண்டு பால் குடிக்கலாம்.தினமும் பூண்டு பல் சாப்பிடுவதால் உடலில் வெள்ளை அணுக்களின் உற்பத்தி அதிகரிக்கிறது.இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.
பூண்டு பல் சாப்பிடுவதால் சளி,ஜலதோஷம் போன்றவை குணமாகும்.பூண்டு பற்களை பச்சையாக சாப்பிட பிடிக்காதவர்கள் பூண்டு ரசம் செய்து சாப்பிடலாம்.