அடடே லாஸ்லியாவா இது!! என்ன இப்படி மாறீட்டாங்க!!

0
132
Damn this is Laslia!! What a change!!
Damn this is Laslia!! What a change!!

அடடே லாஸ்லியாவா இது!! என்ன இப்படி மாறீட்டாங்க!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி தான் உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி ஆகும். இதில் ஒவ்வொரு சீசனிலும் பங்கேற்கும் அனைத்து போட்டியாளர்களுமே இந்த நிகழ்ச்சிக்கு பிறகு பிரபலமடைந்து விடுகிறார்கள்.

அந்த வகையில், பிக் பாஸின் மூன்றாவது சீசனில் களமிறங்கி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற ஒரு நடிகை தான் லாச்லியா ஆவார். இவர் இலங்கையில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார்.

பிறகு இவருக்கு பிக் பாஸில் கலந்து கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதன் பிறகு இதில் போட்டியிட்டு இறுதி சுற்று வரை வந்து மக்களின் மனதில் நீங்கா இடத்தை பிடித்தார்.

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இவருக்கு தொடர்ந்து பட வாய்ப்புகள் கிடைத்தது. எனவே, இவர் தமிழில் ஹர்பஜன் சிங் உடன் பிரண்ட்ஷிப் என்ற திரைப்படமும்,

அதன் பிறகு தன்னுடன் பிக் பாஸில் சக போட்டியாளராக கலந்து கொண்ட தர்ஷனுடன் கூகுள் குட்டப்பா என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படங்களால் இவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார்.

அந்த வகையில் இவர் எப்போதுமே சமூக வலைதளங்களில் ஆக்டிவாக அடிக்கடி தனது புகைபடங்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார். எனவே, தற்போது இவரின் புகைப்படம் ஒன்று இணையத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.

அந்த போட்டோவில் அவர் மிகவும் ஒல்லியாக வெறும் எலும்பும் தோலும் மட்டுமே தெரிகிற அளவிற்கு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அனைவரும் நம்ம பிக் பாஸ் லாஸ்லியாவா இது ஆள் அடையாளமே தெரியவில்லையே என்று கூறி வருகின்றனர்.

Previous articleநான் மக்களால் இங்கு நிற்கிறேன்!! அமித்ஷாவை நாக் அவுட் செய்த உதயநிதி!!
Next articleஇந்த மாவட்டத்திற்கு வருகின்ற 31-ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு!!