ஆலிவ் எண்ணெய் போதும்!! இனி வாழ்நாளில் பொடுகு தொந்தரவை அனுபவிக்க மாட்டீர்கள்!!

Photo of author

By Vijay

தலையில் பொடுகு இருந்தால் முடி உதிர்தல்,தலை அரிப்பு,தலையில் துர்நாற்றம் வீசுதல் போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.எனவே தலையில் உள்ள பொடுகு நீங்க கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ரெமிடியை பின்பற்றவும்.

தீர்வு 01:

1)ஆலிவ் எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
2)கற்பூரம் – ஒன்று

அடுப்பில் தாளிப்பு கரண்டியை வைத்து இரண்டு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய் ஊற்றி லேசாக சூடுபடுத்த வேண்டும்.

பிறகு ஒரு கற்பூரத்தை இடித்து ஆலிவ் எண்ணெயில் சேர்த்து சூடான பிறகு அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த எண்ணெயை நன்கு ஆறவிட்டு முடியின் வேர் பகுதியில் படுமாறு தடவி மசாஜ் செய்ய வேண்டும்.

ஒரு மணி நேரம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை நன்றாக அலசி சுத்தம் செய்ய வேண்டும்.இவ்வாறு செய்து வந்தால் பொடுகு தொந்தரவு நீங்கும்.

தீர்வு 02:

1)தேங்காய் எண்ணெய் – ஒரு தேக்கரண்டி
2)கற்பூரம் – ஒன்று
3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி

அடுப்பில் வாணலி வைத்து இரண்டு தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு அதில் ஒரு கற்பூரத்தை இடித்து தூளாக்கி சேர்த்துக் கொள்ள வேண்டும்.பிறகு ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறை அதில் கலந்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

தீர்வு 03:

1)பூந்திக் கொட்டை – ஒரு தேக்கரண்டி
2)கற்பூரம் – ஒன்று

ஒரு கிண்ணத்தில் பூந்திக்கொட்டை சேர்த்து தண்ணீர் ஊற்றி இரவு முழுவதும் ஊறவிட வேண்டும்.

பிறகு மறுநாள் பூந்திக்கொட்டையை மைய்ய அரைத்து கற்பூரத்தை பொடித்து மிக்ஸ் செய்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு நீங்கும்.

தீர்வு 04:

1)வேப்பிலை – இரண்டு கொத்து
2)தேங்காய் எண்ணெய் – 50 மில்லி

பாத்திரத்தில் 50 மில்லி தேங்காய் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து சூடுபடுத்த வேண்டும்.பிறகு இரண்டு கொத்து வேப்பிலையை அதில் சேர்த்து கொதிக்க வைத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இந்த எண்ணெயை ஆறவிட்டு தலைக்கு பயன்படுத்தி வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்