DANGER.. எந்நேரமும் உங்கள் காதுகளில் Ear Phone இருக்கா? கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க!!

Photo of author

By Divya

DANGER.. எந்நேரமும் உங்கள் காதுகளில் Ear Phone இருக்கா? கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க!!

Divya

DANGER.. Do you always have Ear Phone in your ears? Make sure you know this!!

DANGER.. எந்நேரமும் உங்கள் காதுகளில் Ear Phone இருக்கா? கண்டிப்பா இதை தெரிஞ்சிக்கோங்க!!

இன்று பிறந்த குழந்தைகள் முதல் தள்ளாடும் முதியவர்கள் வரை அனைவரின் கைகளிலும் மொபைல் போன் தான் உள்ளது.சுற்றத்தை மறந்து மொபைல் போனில் மூழ்கி கிடக்கும் இன்றைய தலைமுறையினர் உணவு,இரவு தூக்கம் என்ற ஒன்றை மறந்து வருகின்றனர்.

அதிலும் வீடியோ,பாடல்களை பார்க்க மற்றும் கேட்க இயர் போன் பயன்படுத்துவது அதிகரித்து விட்டது.சிலர் காலையில் காதில் வைத்த இயர் போனை நள்ளிரவு கடந்தாலும் கழட்டி வைப்பதில்லை.இதனால் உடலுக்கும்,காதுகளுக்கும் எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்பதை யாரும் அறிவதில்லை.

உலகில் 1.1 பில்லியன் மக்கள் ஆடியோ அலைகளால் காது கேளாத அபாயத்தில் இருக்கின்றனர் என்ற அதிர்ச்சி முடிவுகள் ஆய்வின் மூலம் வெளியாகி இருக்கிறது.காதில் இயர் போன் மாட்டிக் கொண்டு வாகனம் ஓட்டுவது ஒரு ஸ்டைலாக மாறிவிட்டது.எப்படி மின்னனு சாதனங்களை அதிகம் பயன்படுத்தினால் கண்கள் கெட்டு விடுகிறதோ அதேபோல் தான் இயர் போன் பயன்படுத்துவதால் காதுகள் கேளாத் தன்மையை அடைகிறது.

அது மட்டுமின்றி தலைவலி,மூளை தொடர்பான பாதிப்பு ஏற்படும்.தொடர்ந்து இயர் போன் பயன்படுத்துவதால் காது மற்றும் இதயத்தில் அதிர்வு ஏற்படுகிறது.இதனால் மன ஆரோக்கியம்,காது கேளாமை உள்ளிட்ட பாதிப்புகள் உண்டாகிறது.

ஆகையால் இயர் போன் பயன்பாட்டை குறைத்துக் கொண்டால் காதுகளுக்கும்,உடலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது.