உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பழங்கள் உட்கொள்ளலாம்.பல நோய்களுக்கு பழங்கள் மருந்தாக திகழ்கிறது.நீர்ச்சத்து,நார்ச்சத்து,கால்சியம்,மெக்னீசியம்,இரும்பு,வைட்டமின்கள் என்று எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் பழங்களில் நிறைந்து காணப்படுகிறது.
நாம் எந்த பழங்களை உட்கொண்டாலும் உடனே தண்ணீர் குடிக்கும் பழக்கத்தை கொண்டிருந்தால் அவை நமக்கு தீங்கு விளைவிக்க கூடியவையாக மாறிவிடும்.பழங்கள் உட்கொண்ட பின்னர் தண்ணீர்
குடித்தால் வாயுத் தொல்லை,அஜீரணக் கோளாறு,மலச்சிக்கல்,வயிற்று வலி,வயிறு வீக்கம் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.எந்தெந்த பழங்கள் உட்கொண்ட உடனே தண்ணீர் குடிக்க கூடாது என்பது பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
1)தர்பூசணி பழம்
தண்ணீர்ச்சத்து அதிகம் நிறைந்த தர்பூசணி பழம் உடல் சூட்டை தணிக்க உதவுகிறது.ஆனால் இந்த பழத்தை உட்கொண்ட பின்னர் தண்ணீர் குடித்தால் செரிமானப் பிரச்சனை ஏற்படும்.
2)ஆப்பிள்
இரத்த உற்பத்தியை அதிகரிக்கும் ஆப்பிள் பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் வாயுத் தொல்லை,அஜீரணக் கோளாறு,வயிற்று வலி போன்ற பாதிப்புகள் ஏற்படும்.
3)வாழைப்பழம்
மெக்னீசியம்,பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்களை கொண்டுள்ள வாழைப்பழத்தை சாப்பிட்ட உடனே தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்.வாழைப்பழம் உட்கொண்டு 20 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்கலாம்.
4)எலுமிச்சை
எலுமிச்சை சாறு உட்கொண்ட 30 நிமிடத்திற்கு பிறகு தண்ணீர் குடிக்க வேண்டும்.எலுமிச்சை ஜூஸ் குடித்த உடனே தண்ணீர் குடித்தால் அமில அளவு அதிகரித்துவிடும்.
5)பேரிக்காய்
குளிர்ச்சி நிறைந்த பேரிக்காயை சாப்பிட்ட பின்னர் தண்ணீர் குடித்தால் இருமல்,சளி போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.நாம் எந்த பழத்தை உட்கொண்டாலும் குறைந்தபட்சம் 30 நிமிடங்கள் கழித்து தண்ணீர் குடிக்க வேண்டும்.