ஆபத்து.. இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு மறந்து கூட தண்ணீர் குடித்துவிடாதீர்கள்!!
உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவத்தில் பழங்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.பழங்களில் அதிகளவு நீர்சத்துக்கள் நிறைந்திருப்பதால் அதை உட்கொள்வது அவசியமாகும்.விலை உயர்ந்த பழங்களில் தான் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கும் என்ற எண்ணம் மக்களிடத்தில் இருக்கின்றது.ஆனால் மலிவு விலையில் கிடைக்கின்ற கொய்யா,சீத்தா,பப்பாளி உள்ளிட்ட பழங்களில் தான் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியிருக்கிறது.
பொதுவாக பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கும் பழக்கம் ஒரு சிலரிடம் காணப்படும்.ஆனால் சில பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பழங்களில் அதிக நீர்ச்சத்து இருப்பதால் இதை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
பழங்கள் ஆரோக்கியமானவை என்றாலும் அதை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் உடல் ஆரோக்கியம் பாதிப்படையும்.
1.தண்ணீர் பழம்
அதிக நீர்ச்சத்து நிரம்பிய தர்பூசணி பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது.அப்படி செய்தால் செரிமான மண்டலம் பாதிப்படையும்.உடலில் அமிலத்தன்மை அதிகமாகும்.
2.ஆப்பிள்
அனைவரும் விரும்பி உண்ணும் பழம் ஆப்பிள்.இதை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் வயிறு தொடர்பான பாதிப்புகள் ஏற்படும்.உடல் நலக் கோளாறு ஏற்படும்.
3.வாழைப்பழம்
மாங்கனீசு,பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ள வாழைப்பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் செரிமானக் கோளாறு ஏற்படும்.
4.பப்பாளி
இப்பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.இதை சாப்பிட்ட உடனே தண்ணீர் அருந்தினால் வயிற்றுப்போக்கு ஏற்படும்.
5.மாம்பழம்
அதிக வாசனை மற்றும் சுவை நிறைந்த மாம்பழத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் செரிமான அமைப்பு பாதிப்படையும்.
6.கொய்யாப்பழம்
அதேபோல் கொய்யாப்பழம் சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடித்தால் அஜீர்ணக் கோளாறு ஏற்படும்.
7.மாதுளை
நீர்ச்சத்து நிரம்பிய மாதுளை பாலத்தை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்க கூடாது.அப்படி குடித்தால் உடலில் அமிலத்தன்மை உண்டாகும்.