தமிழக ரேஷன் அட்டை பயன்படுத்துவோருக்கு ஆபத்து!! பாதுகாப்பாக இருங்க!!
தமிழகம் முழுவதும் கோடிக்கணக்கான ரேஷன் அட்டை பயனாளிகள் உள்ளனர். இவர்கள் இதன் மூலம் அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் வங்கி பயனடைகின்றனர். கொரோனா காலத்தில் ரேஷன் அட்டைகளை அடிப்படையாக வைத்து பல்வேறு சலுகைகளை மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. தமிழகத்தில் புதிதாக ஆட்சியில் அமைக்க உள்ள திமுக, பல்வேறு நலத்திட்டங்களை தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது அதில் இல்லத்தரசிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என்பதும் அடக்கும். இதுவும் ரேஷன் அட்டைகளை அடிப்படையாக வைத்து வழங்கவே திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிக் வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது, செனிடைசர் உபயோகிப்பது ,சமூக இடைவெளியை கடைபிடிப்பது போன்ற பாதுகாப்பு முறைமைகளை பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது. இப்படிபட்ட நிலைமையில் ரேஷன் கடைகளில், ரேஷன் பொருட்களை வாங்கும் முன்பே பாதுகாப்பற்ற முறையில் கைவிரல் ரேகையை பதிவு செய்யப்படுகிறது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரவும் அபாயம் அதிகமாக உள்ளது. இதுதொடர்பாக முன்பே பலமுறை குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்ட நிலையிலும் எந்தவிதமான நடவடிக்கைகளையும் கொண்டுவரவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து ரேஷன் பயனாளிகளிடம் கேட்டபோது, ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்குவதற்கு கைரேகை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் கைரேகை பதிவு செய்யும் கருவியில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களது கைரேகையை பதிவு செய்கின்றனர். அதில் எந்தவித கிருமி நாசினியும் தெளிப்பதில்லை. நாள் ஒன்றுக்கு சுமார் 2,000 பேர் ரேஷன் கடைக்கு வருகின்றனர். இவர்களில் யாரேனும் ஒருவருக்கு கொரோனா தொற்று இருந்தாலும் கூட கைரேகை பதிவு செய்யும் கருவியின் மூலம் மற்றவர்களுக்கும் தொற்று பரவகூடும். எனவே கொரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கும் வரை கைரேகை பதிவை நிறுத்தி வைக்க வேண்டும். இல்லையெனில் தொடர்ச்சியாக கிருமி நாசினி பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.