உடலுக்கு தேவையான ஆற்றலை வழங்கும் வைட்டமின்கள் அத்தியாவசியமான ஒன்று.வைட்டமின்களில் கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்கள்,தண்ணீரில் கரையக் கூடிய வைட்டமின்கள் என்று இருவகை இருக்கிறது.
வைட்டமின் ஏ,டி,இ மற்றும் கே போன்ற வைட்டமின்கள் கொழுப்பில் கரையக் கூடிய வைட்டமின்கள் ஆகும்.வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஆகியவை தண்ணீரில் கரையக் கூடியவையாகும்.
இந்த வைட்டமின்களின் அளவு குறையவோ அல்லது அதிகரிக்கவோ கூடாது.உடலில் வைட்டமின் குறையும் பொழுது ஊட்டச்சத்து பற்றாக்குறை ஏற்படும்.இது பல நோய் பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும்.
வைட்டமின் கே:
எலும்புகள் வலுப்பெற,இரத்தம் உறைவு போன்றவற்றிற்கு வைட்டமின் கே மிக அவசியமான ஒன்று.இந்த வைட்டமின் கே குறைபாடு ஏற்பட்டால் அதிக இரத்தப்போக்கு ஏற்படும்.உடல் பலவீனம்,இதய பாதிப்பு போன்றவை ஏற்படும்.
வைட்டமின் டி:
இது ஒரு முக்கிய குறைபாடாக கருதப்படுகிறது.நம் நாட்டில் வைட்டமின் டி குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம்.வைட்டமின் டி குறைபாடு இருந்தால் உடல் சோர்வு,மூட்டு வலி,சிறுநீர் செயலிழப்பு,சிறுநீரக புற்றுநோய்,பெருங்குடல் புற்றுநோய்,உடல் பருமன் போன்ற அபாயங்களை சந்திக்க நேரிடும்.
வைட்டமின் சி
உடலில் வைட்டமின் சி குறைபாடு இருந்தால் நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு ஏற்படக் கூடும்.பற்களில் இரத்த கசிவு,உடல் எடை அதிகரிப்பு,வறண்ட சருமம்,நோய் எதிர்ப்பு மண்டலம் பலவீனமாதல் போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
வைட்டமின் ஏ
உடலில் வைட்டமின் ஏ குறைபாடு ஏற்பட்டால் செல் வளர்ச்சியில் பாதிப்பு ஏற்படும்.வயிறு, நுரையீரல் போன்ற உறுப்புகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.வைட்டமின் ஏ குறைபாட்டால் ஆபத்தான புற்றுநோய் பாதிப்புகள் வர வாய்ப்பிருக்கிறது.
வைட்டமின் பி 12
உடலுக்கு தேவைப்படும் முக்கிய ஊட்டச்சத்துக்களில் ஒன்று வைட்டமின் பி12.இது இரத்த சிவப்பணுக்கள் செயல்பட,மூளை மற்றும் நரம்பு செல்கள் வளர்ச்சியடைய தேவைப்படுகிறது.இந்த வைட்டமின் பி12 குறைபாடு இருந்தால் செரிமானக் கோளாறு,நரம்புகளில் பிரச்சனை,கடுமையான சோர்வு போன்ற பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.