நம் விரல் நகத்தை வைத்து நமது உடல் ஆரோக்கியத்தை கண்டறிந்துவிடலாம்.கை மற்றும் கால்களில் உள்ள நகங்கள் கெரட்டின் ஒரு தடித்த புரதத்தால் ஆனது.நம் நகத்தின் நிறம் மற்றும் தோற்றத்தை வைத்து உடல் ஆரோக்கியத்தை கணித்துவிடலாம்.
உங்கள் நகம் மஞ்சள் நிறத்தில் இருந்தால் மஞ்சள் காமாலை நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்று அர்த்தம்.நகத்தின் நடுவே கோடுகள் இருந்தால் நிக்கோட்டின் படிந்திருக்கிறது என்று அர்த்தம்.விரல் நகங்கள் வெளிர்ந்து இருந்தால் அது உடலில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது என்று அர்த்தம்.
நகத்தில் குழிகள் தென்பட்டால் அது சொரியாசிஸ் பாதிப்பு இருப்பதை உணர்த்துகிறது.ஒருவேளை நகத்தில் கருமை நிறம் பழுப்பு கோடுகள் தென்பட்டால் அது சரும புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம்.கை விரல் நகங்கள் நீல நிறத்தில் இருந்தால் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைவாக இருக்கிறது என்று அர்த்தம்.
விரல் நகங்கள் சொத்தையாக இருந்தால் பூஞ்சை தொற்று உள்ளது என்று அர்த்தம்.இப்படி நகங்கள் இருந்தால் நீங்கள் நகங்களில் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.நகங்களை எலுமிச்சை தோல் கொண்டு தேய்த்து தூய்மையாக்க வேண்டும்.
அதன் பின்னர் வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு நகத்தை சுத்தம் செய்ய வேண்டும்.நகங்களை அடிக்கடி வெட்டி சுத்தம் செய்ய வேண்டும்.நகங்களுக்கு இராசயனங்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
நகங்களை நெயில் கட்டர் கொண்டு வெட்டி சுத்தப்படுத்த வேண்டும்.இரவில் படுக்கச் செல்வதற்கு முன்னர் வெது வெதுப்பான தண்ணீரில் கை கால் நகங்களை ஊறவைத்து சுத்தம் செய்ய வேண்டும்.மேலே சொல்லப்பட்டுள்ள அறிகுறிகள் இருந்தால் உடல் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்றுக் கொள்வது நல்லது.