Black Pepper: நம் வீட்டு சமையலறையில் மருத்துவ குணங்கள் நிறைந்த பொருட்கள் நிறைந்து காணப்படுகிறது.குறிப்பாக அஞ்சறைப்பெட்டியில் இடம் பெற்றிருக்கும் கருப்பு மிளகு காரம் நிறைந்த மூலிகை பொருளாகும்.
கருப்பு மிளகு ஆரோக்கிய பலன்கள்:
*தொண்டை வலி,இருமலை சரி செய்யும் மருந்தாக பயன்படுகிறது.
*இரத்த அழுத்தப் பாதிப்பை சரி செய்ய கருப்பு மிளகை சாப்பிடலாம்.
*இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு கட்டுப்பட மிளகை உட்கொள்ளலாம்.
*மூளையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த கருப்பு மிளகு சாப்பிடலாம்.
*நெஞ்சு சளியை கரைக்க மிளகு கஷாயம் செய்து பருகலாம்.உடலில் உள்ள நச்சுக் கழிவுகளை அகற்ற மிளகு சாப்பிடலாம்.
*காய்ச்சல் வீரியம் குறைய மிளகை இடித்து டீ வைத்து பருகலாம்.செரிமானப் பிரச்சனையை சரி செய்ய உதவுகிறது.
*உடல் கெட்ட கொழுப்பை கரைத்து எடை இழப்பிற்கு உதவுகிறது.
இவ்வளவு நன்மைகள் நிறைந்த கருப்பு மிளகை சிலர் உட்கொள்வதால் கடுமையான பக்கவிளைவுகள் ஏற்படுகிறது.ஆரோக்கியம் நிறைந்த பொருள் என்று மிளகு சொல்லப்பட்டாலும் சிலருக்கு அவை கெடுதல் தரக் கூடியவையாக மாறிவிடுகிறது.
மிளகு சாப்பிடக் கூடாதவர்கள்:
1)தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள்,கர்ப்பிணி பெண்கள் கரு மிளகு சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.கர்ப்ப காலத்தில் கருமிளகு சாப்பிட்டால் அவை கருப்பை சுருக்கத்தை ஏற்படுத்திவிடும்.
2)அல்சர்,வயிற்றுப்புண் பாதிப்பு இருப்பவர்கள் உணவில் கருமிளகு சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.
3)சிறுநீரகம் சார்ந்த பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் கருப்பு மிளகை தவிர்க்க வேண்டும்.கல்லீரல் சம்மந்தபட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் மிளகு சாப்பிட்டால் கடுமையான சிரமங்களை சந்திக்க நேரிடும்.
4)தும்மல்,அரிப்பு போன்ற ஒவ்வாமை பிரச்சனை இருப்பவர்கள் கருமிளகை தவிர்ப்பது நல்லது.
5)நெஞ்செரிச்சல் பாதிப்பால் அவதிப்பட்டு வருபவர்கள் கருப்பு மிளகை தவிர்த்துவிட வேண்டும்.
6)இரைப்பை குடல் சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் கருமிளகு சாப்பிடக் கூடாது.