கேன்சர் செல்களை உருவாக்கும் ஆபத்தான புட்ஸ்!! இந்த உணவுகளை இனி தொட்டுகூட பார்த்திடாதீங்க!!

Photo of author

By Rupa

கேன்சர் செல்களை உருவாக்கும் ஆபத்தான புட்ஸ்!! இந்த உணவுகளை இனி தொட்டுகூட பார்த்திடாதீங்க!!

Rupa

Dangerous Buds that make cancer cells!! Don't even touch these foods!!

நமது பாரம்பரிய உணவுகளை தவிர்த்து மேற்கத்திய உணவுகளை ருசிபார்க்க தொடங்கிவிட்டோம்.இது மிகவும் ஆபத்தான உணவுமுறை பழக்கம் என்ற விழிப்புணர்வு மக்களிடத்தில் இல்லை.தினமும் அசைவ உணவுகள் சாப்பிடுவது,பதப்படுத்தபட்ட உணவுகளை ருசிப்பது,ஆரோக்கியமற்ற உணவுகளை தேடி தேடி உண்பதை தான் இன்றைய தலைமுறையினர் விரும்புகின்றனர்.

இந்த உணவுகள் உடல் ஆரோக்கியத்திற்கு நஞ்சாகிவிடுகிறது.துரித உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உயிருக்கு அப்பதான நோய் பாதிப்புகள் உருவாக வாய்ப்பிருக்கிறது.இன்று நாம் உட்கொள்ளும் பெரும்பாலான உணவுகளில் ஊட்டச்சத்துக்கள் என்ற ஒன்று இல்லை என்பது தான் நிதர்சனம்.

வீட்டில் சமைத்து உண்ணும் பழக்கத்தை மக்கள் மறந்து வருகின்றனர்.ஹோட்டலில் விற்கப்படும் பரோட்டா,காரம் மற்றும் கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையே பலரும் விரும்பி சாப்பிடுகின்றனர்.ரெடிமேட் உணவுகள்,பதப்படுத்ததப்பட்ட உணவுகள்,எண்ணெயில் வறுத்த பொரித்த உணவுகள் அனைத்தும் உடல் ஆரோக்கியத்தை கேள்விக்குறியாக்குகிறது.

குடிப்பழக்கம்,பதப்படுத்தப்பட்ட உணவுகள்,சிவப்பு இறைச்சி,போன்றவை உடலில் புற்றுநோய் செல்களை வளரச் செய்துவிடும்.இன்று பலர் அசைவ உணவுகளை பச்சையாக சாப்பிடுகின்றனர்.பச்சை மாமிசத்தில் இருக்கின்ற பாக்டீரியாக்கள் மற்றும் கிருமிகள் நேரிடையாக உடலுக்குள் சென்று புற்றுநோய் கட்டிகளை உருவாக்கிவிடும்.

மைதாவில் தயாரிக்கப்படும் பிரட்,பீட்ஸா,பர்கர்,பரோட்டா,பிஸ்கட்,கேக் போன்ற உணவுப் பொருட்கள் புற்றுநோய் பாதிப்பை உண்டாக்கிவிடும்.இதுபோன்ற ஆரோக்கியமற்ற உணவுகளால் உணவுக்குழாய் முழுமையாக பாதிக்கப்படுகிறது.துரித உணவுகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் நீரிழவு நோய்,மலச்சிக்கல்,அஜீரணக் கோளாறு போன்றவை ஏற்படும்.எனவே பதப்படுத்தப்பட்ட உணவுகள்,துரித உணவுகளை தவிர்த்துவிட்டு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.