இனிப்பு சதைப்பற்றுள்ள பழமான பேரிச்சை அனைவரின் பேவரைட்டாக இருக்கிறது.இயற்கையாகவே இதில் இரும்புச்சத்து கொட்டி கிடக்கிறது.இதனால் இரத்த சோகை,இரும்புச்சத்து குறைபாடு,உடல் பலவீனமனவர்கள் தினந்தோறும் இரண்டு பேரிச்சம் பழம் சாப்பிட மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
அதிக சுவை கொண்ட பேரிச்சம் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதன் விதையை தூக்கி எறிவது வழக்கமான ஒன்று தான்.ஆனால் அதன் மகிமை தெரிந்தால் இனி அதை தூக்கிவீச மாட்டீர்கள்.பேரிச்சை விதையில் ஒலிக் அமிலம்,டயட்டரி பைபர் போன்றவை அதிகளவு நிறைந்து காணப்படுகிறது.
இந்த விதையை உலர்த்தி பொடியாக்கி சாப்பிட்டு வந்தால் உடலில் ஏகப்பட்ட மாயாஜாலம் நிகழும்.செரிமானப் பிரச்சனை இருப்பவர்கள் பேரிச்சை விதைப்பொடியை நீரில் கலந்து பருகி வந்தால் உரிய பலன் கிடைக்கும்.
பேரிச்சை விதைப்பொடி உடலில் ஆக்ஸிஜனேற்றத்தை தடுக்க உதவுகிறது.இந்த பொடியை பாலில் கலந்து பருகி வந்தால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.பேரிச்சை விதையில் கால்சியம் சத்து நிறைந்திருக்கிறது.எலும்பு சம்மந்தபட்ட பிரச்சனைகள் உள்ளவர்கள் பேரிச்சை விதையை பொடித்து தேனில் குழைத்து சாப்பிட்டு வரலாம்.
மூட்டு வலி,முழங்கால் வலி போன்றவற்றை அனுபவித்து வருபவர்கள் பேரிச்சை விதையை பொடித்து தண்ணீரில் கலந்து பருகலாம்.இதில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்து காணப்படுவதால் மலச்சிக்கல் உள்ளவர்கள் காலை நேரத்தில் பேரிச்சை விதை தேநீர் செய்து பருகி பலன் பெறலாம்.
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் பேரிச்சை விதைக்கு உண்டு.எனவே தினமும் ஒரு கிளாஸ் சூடான நீரில் பேரிச்சை பொடி கலந்து பருகுங்கள்.
பேரிச்சை விதைப்பொடி தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு கைப்பிடி அளவிற்கு பேரிச்சை விதை சேகரித்து கொள்ளுங்கள்.பிறகு இதை தண்ணீரில் போட்டு நன்றாக அலசி வெயிலில் போட்டு காய வையுங்கள்.
பிறகு இதை மிக்சர் கிரைண்டரில் போட்டு நைஸ் பவுடராகும் வரை பொடித்து ஒரு டப்பாவில் கொட்டி சேகரித்துக் கொள்ளவும்.இந்த பொடியை பால் அல்லது தண்ணீர் கலந்து தினமும் குடிக்கலாம்.

