கனமழை காரணமாக மாற்றப்பட்ட அரையாண்டு தேர்வுகளுக்கான தேதி அறிவிப்பு!!

Photo of author

By Gayathri

பெஞ்சால் புயலின் காரணமாக பல மாவட்டங்களில் அரையாண்டு தேர்வுகளை மாணவர்கள் எழுத முடியாமல் போனது, தமிழக அரசும் அரையாண்டு தேர்வில் தேதி அறிவிக்காமல் விடுமுறை விடப்பட்டது. தற்பொழுது அந்த தேர்வுக்கான தேர்வு தகுதிகளை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது.

 

தமிழகத்தில் பள்ளிக்கல்வி பாடத்திட்டத்தின்கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளிலும் 6 முதல் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 9 ஆம் தேதி தொடங்கி இன்று வரை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, பருவமழை தீவிரத்தின் காரணமாக டிசம்பர் 12 ஆம் தேதி 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை நடக்க இருந்த தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.

 

இந்நிலையில் தள்ளிவைக்கப்பட்ட அரையாண்டு தேர்வுகளை டிசம்பர் 21ஆம் தேதி (நாளை) நடத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகம் சார்பில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது :-

 

கனமழையால் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 12ஆம் தேதி பல மாவட்டங்களில் அரையாண்டுத் தேர்வு நடத்தப்படவில்லை. அந்த நாளில் நடைபெறாத பாடத் தேர்வுகள் டிசம்பர் 21ஆம் தேதியான நாளை நடத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

மேலும், இது குறித்து அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கும் அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.