வாரிசு உரிமை சட்டத்தை பொருத்தவரையில் மகன்களுக்கு மட்டுமே மதிப்பளிக்கப்பட்டு வந்தது. இதை எதிர்த்து மகள்களுக்கும் சொத்தில் உரிமை வேண்டும் என்று கேட்கப்பட்ட நிலையில், 2005 ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்திற்குப் பிறகு, மகள்களும் மூதாதையர் சொத்தில் மகன்களுக்கு சம உரிமை பெறத் தொடங்கினர்.
இருப்பினும் தந்தையினுடைய சுய சொத்துக்களை பகிர்ந்த அளிப்பது அல்லது ஒருவருக்கு மட்டுமே கொடுப்பதினால் அது தந்தையினுடைய முடிவாகவே கருதப்படுகிறது. இது குறித்த முழு விவரத்தையும் இந்த பதிவில் காண்போம்.
தந்தையினுடைய தனிப்பட்ட சொத்து :-
மூதாதையர் உடைய பூர்வீக சொத்து என்றால் அவற்றை மகன் மற்றும் மகள் இருவருக்கும் சமமாக பிரித்துக் கொடுக்க சட்டம் ஒத்துழைக்கிறது. ஆனால் தந்தை சம்பாதித்த சொத்து என்றால் அவற்றின் நிலை வேறு.
சுயமாக வாங்கிய சொத்து என்பது ஒரு நபர் தனது கடின உழைப்பு அல்லது சம்பாதிப்பின் மூலம் பெற்ற சொத்து. இந்தச் சொத்தின் மீது தந்தைக்கு முழு உரிமை உண்டு, அதை அவர் விரும்பியவருக்குக் கொடுக்கலாம்.
ஒருவேளை, தந்தை இல்லாத காலத்தில் அவர் உயில் எழுதி வைக்கவில்லை என்றால் அந்த சொத்தானது அவருடைய பிள்ளைகள் இருவருக்கும் பகிர்ந்து அளிக்கப்படும்.
இந்த முறையானது திருமணமான பெண்களுக்கும் பொருந்தும். பெண்கள் திருமணம் செய்து கொண்டு தன்னுடைய கணவன் வீட்டிற்கு சென்று விட்டால் தந்தை உடைய சொத்தில் அல்லது மூதாதையர் உடைய சொத்தில் பங்கு கோர முடியாது என்பது 2005 ஆம் ஆண்டு செய்யப்பட்ட திருத்தத்தின் மூலம் மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், 2020-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம், திருமணமானாலும் மகள்களுக்கு தந்தையின் சொத்தில் சம பங்கு கிடைக்கும் என்று தெளிவுபடுத்தியது. இந்த முடிவு பெண்களின் பொருளாதார மேம்பாட்டிற்கான ஒரு பெரிய படியாக நிரூபிக்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு திருத்தத்திற்குப் பிறகு, ஏற்கனவே பிறந்த பெண் குழந்தைகளுக்கு இந்தப் புதிய சட்டம் பொருந்துமா என்ற கேள்வி எழுந்தது. 2020 ஆம் ஆண்டு இந்த பிரச்சனையில் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பை வழங்கிய உச்சநீதிமன்றம், இந்த சட்டம் பின்னோக்கி நடைமுறைக்கு வரும் என்று கூறியது. அதாவது 2005 ஆம் ஆண்டுக்கு முன் பிறந்த அனைத்து மகள்களும் பிறந்த தேதியைப் பொருட்படுத்தாமல் மூதாதையர் சொத்தில் சம பங்கு தர முடியும் என உறுதி செய்யப்பட்டது.