மகளின் திருமணம்!! கண் இமைக்கும் நொடியில் உயிரிழந்த தந்தை!!

Photo of author

By Parthipan K

மகளின் திருமணம்!! கண் இமைக்கும் நொடியில் உயிரிழந்த தந்தை!!

தேனி மாவட்டத்திலுள்ள முதுகுளத்தூர் அருகே கீரனூர் பகுதியை சேர்ந்தவர் கருப்பையா என்பவர். இவர் சென்னையில் வசித்து வந்துள்ளார். தனது மகளின் திருமணத்திற்காக தனது சொந்த ஊரான கீரனூர் கிராமத்திற்கு வந்துள்ளார். அந்த வேளையில், மகளின் திருமணத்தை முடித்துவிட்டு கருப்பையா தனது நண்பர் முனுசாமியுடன் இருசக்கர வாகனத்தில் குளிப்பதற்காக ஊரணிக்கு சென்றுள்ளார். அங்கு குளித்துவிட்டு அதே இரு சக்கர வாகனத்தில் இருவரும் வீடு திரும்பினர்.

அப்போது முதுகுளத்திலிருந்து மதுரை நோக்கி சென்ற வேன் இவர்களது இருசக்கர வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் இருவரும் தூக்கி விசப்பட்டு படுகாயம் அடைந்தனர்.

பக்கத்தில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு முதலுதவி சிகிச்சைக்காக முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி கருப்பையா பரிதாபமாக உயரிழந்தார்.

நண்பர் முனுசாமிக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து முதுகுளத்தூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.