துருக்கி அதிபர் தேர்தல் 2023!! மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்த அதிபர் எர்டோகன்!!

0
130
turkish-presidential-election-2023-president-erdogan-won-again-and-retained-his-power
turkish-presidential-election-2023-president-erdogan-won-again-and-retained-his-power
துருக்கி அதிபர் தேர்தல் 2023!! மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்த அதிபர் எர்டோகன்!!
துருக்கியில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்கவைத்துள்ளார் அதிபர் ரிஷப் தயீப் எர்டோகன்.
துருக்கியில் கடந்த 14ம் தேதி அதிபர் பதவிக்கான இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற்றது. அதில் தற்போது அதிபராக இருக்கும் ரிஷப் தயீப் எர்டோகன் அவர்கள் 52 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி அடைந்து மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளார்.
துருக்கி அதிபர் தேர்தல் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. இதில் துருக்கியில் கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் பொழுது அதிபர் எர்டோகன் தலைமையிதான அரசு நிவாரணப் பணிகளை செய்வதில் மந்தநிலையில் செயல்பட்டதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து அதிபர் எர்டோகன் ஆட்சியில் அதிருப்தி ஏற்பட நாடாளுமன்றம் மற்றும் அதிபர் தேர்தலில் அதிபர் எர்டோகன் அவர்களுக்கு 35.3 சதவீதம் வாக்குகள் மட்டுமே கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் எதிர்பார்ப்புகள், கருத்துக் கணிப்புகள் அனைத்தையும் பொய்யாக்கி அதிபர் எர்டோகன் 49.5 சதவீத வாக்குகள் பெற்றார். துருக்கியின் அரசியலமைப்பு சட்டப்படி அதிபர் ஆக வேண்டும் என்றால் 50 சதவீத வாக்குகள் பெற வேண்டும். இதனால் கடந்த ஞாயிற்று கிழமை 2ம் கட்ட தேர்தல் நடைபெற்றது.
இந்த 2ம் கட்ட தேர்தலில் தற்போது அதிபராக இருக்கும் எர்டோகன் அவர்கள் 52 சதவீத வாக்குகள் பெற்றுள்ளதாகவும் அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் கெமால் கிளிச்சதார் அவர்களுக்கு 47 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தேர்தலில் வெற்றி உறுதியானதை அடுத்து இஸ்தான்புலில் ஆதரவாளர்களுக்கு மத்தியில் அதிபர் எர்டோகன் அவர்கள் பேசினார். அப்போது அவர் “மேலும் 5 ஆண்டுகள் நாட்டை ஆளும் வாய்ப்பை கொடுத்த மக்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன். துருக்கிதான் இந்த போட்டியில் இன்றைய உண்மையான வெற்றியாளர்” என்று அவர் கூறியுள்ளார்.