தவெக கட்சி பெயரைக் கூட சொல்ல விரும்பவில்லை!! கவர்னரால் தான் கட்சி வளர்கிறது!!

0
3
Daveka doesn't even want to name the party!! The party grows only because of the governor!!
Daveka doesn't even want to name the party!! The party grows only because of the governor!!

சமீபத்தில் அண்ணா அறிவாலயத்தில் மாற்று கட்சியினர் திமுகவுடன் கூட்டணியில் இணைந்துள்ளது. அந்நிகழ்ச்சியில் நாங்கள் நேற்று முளைத்த காளான் அல்ல. 1949 ஆம் ஆண்டு கட்சி ஆரம்பித்து 1957 ஆம் ஆண்டு தான் தேர்தல் களமே கண்டோம். நாங்கள் பதவியில் அமர வேண்டும் என்பதற்காக கட்சிக்கு வரவில்லை. ஏழை, எளியோருக்கு தொண்டு செய்யவும், மக்களுக்காக பணியாற்றுவதையும் முதற்கடமையாக கொண்டு வந்துள்ளோம். சில கட்சிகள் நேற்று முளைத்து வரப்போகும் தேர்தலில் களம் காணப் போகிறார்களாம்! மேலும், தான் தான் அடுத்த முதல்வர் என்று சொல்லிக் கொள்கினர். அப்பேர்ப்பட்ட கட்சியின் பெயரை கூட நான் சொல்ல விரும்பவில்லை என்று முதல்வர் ஜாடையாக தவெக வை தாக்கியுள்ளார்.

மேலும், கவர்னர் மதத்தை அடிப்படையாகக் கொண்டு பேசுவது மனதை கலங்க வைக்கிறது. எனினும் தமிழகத்திற்கு அவரை கவர்னராக இருக்க வேண்டும் என மத்திய அரசை கேட்டுக் கொள்வேன். அவர் அப்படி இருந்தால்தான் எங்கள் பணி சிறக்கும் என்று தெரிவித்துள்ளார்.

அவரைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் உதயநிதி பேசுகையில், 2026 சட்ட தேர்தலில் 200 தொகுதிகளில் ஜெயித்து மாபெரும் வெற்றி காண்போம். மேலும் ஈரோடு கிழக்கு தேர்தலிலும் ஜெயிப்போம். டங்ஸ்டன் திட்டத்தை வர விட மாட்டோம். கவர்னர் தமிழக அடையாளத்தை அழிக்க நினைக்கிறார் அது ஒரு போதும் நடக்காது என்று தெரிவித்துள்ளார். தமிழ் உணர்வும், தன்மானமும் நிறைந்த கட்சி திமுக. எங்கு வந்துள்ளோம் என்பதே மிக முக்கியம் என்று அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.

Previous articleகுழந்தைகளுக்கு வாக்கிங் நிமோனியா பரவல்!!சுகாதாரத்துறை புதிய எச்சரிக்கை!!
Next articleபவதாரணியின் கடைசி ஆசை!! மனம் திறந்த கணவர்!!