தவெக, முஸ்லிம் லீக் கட்சியினர் கூட்டணி!! பாஜகவை எதிர்க்கும் நம்பிக்கை!!

Photo of author

By Gayathri

தவெக, முஸ்லிம் லீக் கட்சியினர் கூட்டணி!! பாஜகவை எதிர்க்கும் நம்பிக்கை!!

Gayathri

Daveka, Muslim League party alliance!! Hope to oppose BJP!!

தவெக தலைவர் விஜய் சமீபத்தில் தேர்தல் வியூகர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனைகளை கேட்டு பெற்றுள்ளார். அதைத்தொடர்ந்து அவர் கட்சியின் உள்கட்டமைப்பு பணிகளை ஸ்ட்ராங்காக மாற்ற முயன்று வருகிறார். தற்சமயம் வரை தமிழ்நாடு முழுவதும் 120 மாவட்ட செயலாளர்களை நியமிக்கும் பணியில் வெற்றிகரமாக 95 பணியாளர்களை நியமித்துள்ளார். கட்சியின் முதலாம் ஆண்டு விழாவையும், கட்சி கூட்டத்தையும் இந்த மாத இறுதியிலாவது அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலாவது கட்சி செயலாளர்கள் மற்றும் தொண்டர்களுடன் இணைந்து கொண்டாட போவதாகவும், கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள பூஞ்சேரி தனியார் மஹாலில் தடபுலாக ஏற்பாடு செய்யப் போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அதனைத் தொடர்ந்து தற்சமயம் முஸ்லிம் லீக் கட்சி தலைவர் முஸ்தபா தவெக செயலாளர் ஆனந்த் மற்றும் ஆதவ் அர்ஜுனா ஆகியவர்களை சந்தித்து கட்சி கூட்டணி குறித்து கலந்து ஆலோசித்துள்ளனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய முஸ்தபா, தவெக தலைவர் விஜய் மதவாத பாஜகவை எதிர்க்கும் என்ற நம்பிக்கையில் நாங்கள் அவருடன் கூட்டணி குறித்து பேசி உள்ளோம். 2026 தேர்தலில் விஜய்க்கு முஸ்லிம் மற்றும் கிறிஸ்டின்களின் வாக்கு அதிகமாக இருக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 2026 தேர்தலுக்குப் பின் எந்த ஒரு மதத்தையும் முன்வைத்து அரசியல் நடக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.