தவெக + பாமக + நாதக.. முக்கோண அரசியல் கூட்டணி உறுதி!! க்ளூ கொடுத்த தலைவர்கள்!!

Photo of author

By Rupa

PMK TVK NTK: நாம் தமிழர் சீமான் பிறந்தநாளுக்கு தவெக விஜய் மற்றும் பாமக அன்புமணி ராமதாஸ் இருவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

நடிகர் விஜய் கட்சி தொடங்க ஆரம்பித்தலிருந்து நாம் தமிழர் சீமான் தனது முழு ஆதரவை தெரிவித்து வந்தார். ஏன் எனது தம்பி என்ற உறவு தான்  என பெருமிதத்துடனும் கூறினார். அதற்கேற்றார் போல மக்களவை தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிட்டு அங்கீகாரம் பெற்ற கட்சியாக தேர்தல் ஆணையம் அறிவித்தற்கு விஜய் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இதனால் இவர்களுடனான ஒற்றுமை அடுத்தடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது. இவ்வாறு இருக்கையில் விஜய் தனது மாநாட்டில் கட்சி கொள்கை குறித்து வெளியிட்டார். இதற்கு பலர் ஆதரவு தெரிவித்திருந்தாலும் பெரும்பாலானோர் எதிர்ப்பு தான் தெரிவித்தனர். இவ்வாறு இருக்கையில் சீமான் அவரது கொள்கை பிடிக்கவில்லை மாற்ற வேண்டுமென சரமாரிய விஜய்யை தாக்கி பேசியிருந்தார். இவ்வாறு அவர் பேசியதற்கு திமுக கூட காரணமாக இருக்கலாம் என கூறியிருந்தனர்.

ஆனால் சீமான் பேசியதற்கு தவெக சார்பாக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை. அச்சமயத்தில் இவர்களது கூட்டணிக்கு வாய்ப்பே இல்லை என கூறினர். ஆனால் அதனை உடைக்கும் விதமாக தற்பொழுது சீமான் பிறந்தநாளன இன்று விஜய் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். இது ஓர் பக்கம் இருக்க விஜய்யுடன் கூட்டணி வைக்க பாமக நெருங்கி வரும் நிலையில் அவரும் சீமானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இதுவே கமல் பிறந்தநாளன்று எந்த ஒரு வாழ்த்தையும் விஜய் தெரிவிக்கவில்லை. மேலும் சீமானுக்கு விஜய் வாழ்த்து தெரிவித்திருப்பது இவரது அரசியல் பார்வையில் அடுத்த கட்ட நகர்வாக உள்ளது. இதன் முடிவு பாமக தவெக நாதக என முக்கோண அரசியல் கூட்டணி உருவாக அதிக வாய்ப்புள்ளது என்பது தெரிய வருகிறது.