தவெக+அதிமுக: விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. கூட்டணி உறுதி!! ஆளும் கட்சிக்கு விழும் பெரும் இடி!!

0
520
Daveka+ADMK: One word from Vijay.. The alliance is confirmed!!
Daveka+ADMK: One word from Vijay.. The alliance is confirmed!!

தவெக+அதிமுக: விஜய் சொன்ன ஒரு வார்த்தை.. கூட்டணி உறுதி!! ஆளும் கட்சிக்கு விழும் பெரும் இடி!!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் நடிகருமான விஜய் அவர்கள் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மதிப்பெண் எடுத்த மாணவர் மற்றும் மாணவிகளுக்கு விருது மற்றும் ஊக்கத்தொகை வழங்கும் விழா இன்று சென்னையில் நடைபெற்று வருகிறது.இந்த கல்வி விருது வழங்குவதை விஜய் அவர்கள் கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தினார்.அச்சமயத்தில் இவர் அதிகாரப்பூர்வமாக அரசியலுக்கு வருவது குறித்து எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை.

விருது வழங்கும் விழாவை வைத்து இவர் அரசியலுக்கு வரப்போகிறார் என பலரும் கூறினர்.அதேபோல பலர் கூறியதற்கு இணங்க அது உண்மையுமானது.இம்முறை விருது வழங்கும் விழாவில் பல கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளனர்.விருது பெரும் மாணவர் மற்றும் மாணவிகள் கட்டாயம் செல்போன் எடுத்து வரக்கூடாது என்று தெரிவித்துள்ளனர்.இதன் மூலம் நேரத்தை மிச்சப்படுத்துவதுடன் விரைந்து விழாவினை முடிக்க முடியும்.

மேலும் விஜய் அவர்கள் விருது வழங்கும் விழாவில் போதை பொருள் ஊடுருவல் குறித்து பேசி உள்ளார்.குறிப்பாக அதிமுக எடப்பாடி கூறிய வசனத்தை இவரும் பேசியது சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.விருது விழாவில் விஜய் கூறியதாவது, போதைப் பொருளானது இளைஞர்கள் மத்தியில் அதிகளவில் உபயோகத்தில் இருப்பது சற்று அச்சமடைய வைக்கிறது.ஒரு பெற்றோர் என்ற வகையிலும் அரசியல் கட்சி தலைவராகவும் இது அச்சுறுத்துகிறது என்று தெரிவித்தார்.

பன்னிரண்டாம் வகுப்பில் இருந்து உயர்கல்வியை நோக்கி செல்லும் மாணவர்கள் நீங்கள் எந்த துறையை எடுத்தாலும் அதில் முழு ஈடுபாடு காட்டும்பொழுது வெற்றிக்கான முடியும்.அதனால் உங்களுக்கு பிடித்தமான துறையை தேர்வு செய்யுங்கள் என்றும் அறிவுறுத்தினார்.மேலும், say no to temporary pleasures, say no to drugs என்ற வாசகத்தையும் தெரிவித்தார்.இந்த வாசகம் தான் தற்பொழுது வைரலாகி வருகிறது.

போதைப்பொருள் ஊடுருவலில் முக்கிய காரணம் திமுக தான் என எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தனது டிவிட்டர் பக்கத்தில் கண்டனம் தெரிவித்து கூறுகையில் அதில் say no to drugs என்ற வாசகத்தை குறிப்பிட்டார்.அந்த வாசகத்தையே அச்சு மாறாமல் இதனை தற்பொழுது விஜய் அவர்களும் தெரிவித்துள்ளார்.அதுமட்டுமின்றி விஜய் அவர்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்திலும் திமுகவிற்கு எதிராக கருப்பு கொடி தூக்கியது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது போதைப்பொருள் ஊடுருவலிலும் திமுகவிற்கு எதிராகவும் அதிமுகவின் வாசகத்தை பேசியது அரசியல் வட்டாரங்களில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுமட்டுமின்றி அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெக விஜய்யுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் அப்போது தகவல்கள் வெளிவருகிறது. இதனையெல்லாம் நிரூபிக்கும் விதமாக விஜயின் பேச்சானது இந்த கல்வி விருது விழாவில் உள்ளது.