சேலம் அரசு மருத்துவமனை வளாகம் முன் இரண்டு சடலங்கள்! போலீசார் தீவிர விசாரணை

Photo of author

By Parthipan K

சேலம் அரசு மருத்துவமனை வளாகம் முன் இருவர் சடலமாக கிடந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம், இளம்பிள்ளை பகுதியை சேர்ந்த நெசவாளர்கள் இருவர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்துள்ளனர். கடந்த ஒரு மாதமாக காலமாக இவர்களுக்கு வேலை இல்லாத காரணத்தால் இருவரும் மாநகரப் சாலை பகுதிகளில் சுற்றித்திரிந்து உள்ளனர்.  இந்நிலையில் இன்று காலை அரசு மருத்துவமனை வளாகம் முன்பு இருவரும் உயிர் பிரிந்து சடலமாக கிடந்தனர்.

இதனைப் பார்த்த அப்பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்த செவ்வாய்பேட்டை காவல்துறையினர் இருவரின் உடல்களையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இருவரின் சடலம் கிடந்த இடத்தில் குளிர்பான பாட்டில்கள் கண்டெடுக்கப்பட்டது. இதன் மூலம் இருவரும் குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்களா? இல்லை வேறு ஏதும் காரணத்தால் இறந்துள்ளார்களா? என்று பல்வேறுபட்ட கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.