அழுகிய  நிலையில் துர்நாற்றத்துடன் மீட்கப்பட்ட பெண் சடலம் !.இந்த பெண் யார்? போலீசார் தீவிர விசாரணை !..

 அழுகிய  நிலையில் துர்நாற்றத்துடன் மீட்கப்பட்ட பெண் சடலம் !.இந்த பெண் யார்? போலீசார் தீவிர விசாரணை !..

திருச்சி திம்மராயசமுத்திரம் கிராம நிர்வாகியான அதிகாரி ஹரி கிருஷ்ணன் என்பவர்  தனது உதவியாளருடன் அலுவலர் எல்கைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டு வந்திருந்தார்.அப்போது திருச்சி திருவளர்ச்சோலையிலுள்ள காளவாய் அருகே காவிரி ஆற்றில் உள்ள மணல் திட்டில் சுமார் 45 வயது மதிக்கத்தக்க இறந்த நிலையில் ஒரு பெண் சடலம்  கிடந்தது.

ஏற்கனவே இந்த ஊர் பொதுமக்கள் அனைவரும் எங்கள் பகுதியில் அதிக அளவில்    துர்நாற்றம் வீசுவதாக காவல் துறையினரிடம் புகார் அளித்ததாக கூறப்படுகிறது.தற்போது இது அதிகாரி கண்ணுக்கு தென்பட்டது.இந்நிலையில் இந்த அழுகிய சடலத்தை பார்த்த கிராம நிர்வாக அதிகாரி கிருஷ்ணன் திருவரங்கம் போலீசில் புகார் கொடுத்தார்.

புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்விசாரணையில் இந்த பெண் எப்படி இங்கு வந்தார்?இது யார்? இது கொலையா?  இல்லை தற்கொலையா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.இதனை தொடர்ந்து அழகிய நிலையில் பெண் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவுள்ளது.

Leave a Comment