அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே! இன்று உடன் ஓய்கிறது இந்த குரல்!

Photo of author

By Rupa

அன்பார்ந்த வாக்காளர் பெருமக்களே! இன்று உடன் ஓய்கிறது இந்த குரல்!

சட்டமன்ற தேர்தலானது மொத்தம் 5 மாநிலங்களில் நடக்கப்போகிறது.இந்த 5 மாநிலங்களில் புதுச்சேரி,தமிழ்நாடு,கேரளா போன்ற மாநிலங்களில் ஒரே நாளில் வாக்கு பதிவுகள் தொடங்குகின்றனர்.அந்தவகையில் அந்த 5  மாநிலங்களிலும் அனல் பரக்கும் பிரச்சாரம் நடந்து வருகிறது.முதலில் தேர்தல் தேதியானது பிப்ரவரி மாதம் 26 ஆம் தேதி நடைபெற்றது.அதனையடுத்து வேட்புமனு தாக்கல் மார்ச் 12 நடைப்பெற்று மார்ச் 19 ஆம் தேதி நிறைவடைந்தது.மார்ச் 20 தேதி வேட்புமனு மீதான பரிசீலனை நடைபெற்றது.அதன்பின் வேட்புமனு திரும்ப பெரும் நாள் 2 ம் தேதியான மாலை வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது.

தமிழகத்தில் மொத்தம் 234 தொகுதிகளில் மொத்தம் 3998 பேர் போட்டியிடுகின்றனர்.அதில் 3,585 ஆண் வேட்பாளர்களும்,411 பேர் பெண் வேட்பாளர்களும்,2  இதர பாலினத்தினரும் வேட்பாரளராக போட்டியிடுகின்றனர்.இந்த வேட்புமனு தாக்கல் தொடங்கிய நாளில் இருந்தே தேர்தல் திருவிழா தொடங்க ஆரம்பித்துவிட்டது.அதுமட்டுமின்றி இரு மூத்த தலைவர்கள் இன்றி நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் இதுவே ஆகும்.

இரும் பெரிய ஆட்சிகள் தன்னுடன் கூட்டணி கட்சிகளை வைத்துக்கொண்டு ஆட்சியை பிடிப்பதற்கு தேர்தலில் போட்டியிட்டு வருகிறது.திமுக காங்கிரசுடன் கூட்டணி வைத்துக் கொண்டு ராகுல்காந்தி உள்ளிட்ட அனைவரும் அவரவர் கட்சி வேட்பாளரை ஆதரித்து பிரச்சாரம் செய்தனர்.அதேபோல அதிமுக-வும் பாஜக வுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மோடி-யுடன் தன் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்து வந்தனர்.

இந்த நிலையில் இந்த பிரச்சாரமானது ஞாயிற்று கிழமை இன்று இரவு 7 மணியுடன் முடிகிறது.அதே போல பிரச்சாரத்திற்கு வந்தவர்கள் இன்று 7 மணி முன்னதாகவே வெளியேறிவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.அதுமட்டுமின்றி கருத்துகணிப்புகள் வெளியிடவும் கூடாது எனக் கூறியுள்ளனர்.அதே போல டாஸ்மாக் மதுக்கடைகளும் இன்றுடன் மூன்று நாட்களுக்கு மூடப்படும் என அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்

தமிழகத்தில் நாளைமறுநாள் தேர்தல் வாக்குபதிவு தொடங்குகிறது.இதற்காக மொத்தம் 88 ஆயிரத்து 937 வாக்குச்சாவடிகள் தயார் படுத்தப்படுகின்றனர்.வாக்குப்பதிவிற்காக ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 102 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளனர்.வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே மாதம் 2 ஆம் தேதி சீல் உடைக்கப்பட்டு 11 மணியளவில் கணக்கெடுப்பு தொடங்கும் என அறிவித்துள்ளனர்.