பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு – உறவினர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு!

Photo of author

By Savitha

பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழப்பு – உறவினர்கள் மற்றும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு

செங்கல்பட்டு மாவட்டம் கூவத்தூர் அடுத்த நெடுமரம் பகுதியைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி பிரமிளா (29).

பிரசவத்திற்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு ஆண் குழந்தை பிறந்த நிலையில் உயிரிழந்து விட்டார்‌.

மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் பிரமிளா உயிரிழந்து விட்டதாக கூறி அவரது உறவினர்கள் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்னதாக சாலை மறியலில் ஈடுபட முயன்றவர்களை தடுக்க முயன்ற போலீசாருக்கும், பரிமளாவின் உறவினர்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது.