மீண்டும் கொலை மிரட்டல்!! ஆனால் இந்த முறை புதிய ஹீரோ!!

Photo of author

By Gayathri

நடிகர் சல்மான் கான் அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.

கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. எனினும் அவர் தன்னுடைய பட வேலைகளை கவனித்து வருகிறார் என்ற செய்திகளும் தற்போது வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து நடிகர் ஷாருக்கான் அவர்களுக்கும் தற்பொழுது கொலை மிரட்டல் ஆனது விடுக்கப்பட்டுள்ளது.போலீஸ் குற்றவாளியை நெருங்கிவிட்டோம் என நினைத்த நிலையில், அதில் திடீர் டிவிஸ்ட் ஏற்பட்டுள்ளது.

கடந்த மாதம் கொலை செய்யப்பட்ட பாபா சித்திக் நடிகர்களுடன் நெருங்கி பழகக் கூடியவர். இவருடைய கொலை சம்பவம் ஆனது அரசியலில் உள்ளவர்களை மட்டுமின்றி நடிகர்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இவர் நெருங்கி பழக்கம் சல்மான் கானுக்கு தான் தற்பொழுது பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு இருந்த நிலையில், தற்பொழுது ஷாருக்கான்க்கும் 50 லட்சம் ரூபாய் பணம் கேட்டு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷாருக்கான் மற்றும் சல்மான்கான் இருவரும் ஏதோ ஒரு மனஸ்தாபத்தால் சண்டை போட்டு பேசாம இருந்துள்ளனர். இவர்கள் இருவரையும் பாபா சித்திக் அவர்கள் தான் சமாதானப்படுத்தி வைத்தார் என்று கூறப்படுகிறது.

இவர்கள் மூவருக்கும் இவ்வாறு ஒரு தொடர்பு இருக்கையில் பாபா சித்திக் கொலை செய்யப்பட்டார். மேலும் இவர்கள் இருவருக்கும் கொலை மிரட்டல் ஆனது விடுக்கப்பட்டது அனைவரிடமும் பயத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

ஷாருக்கானுக்கு சத்தீஸ்கர் மாநிலம், ராய்பூரில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது. பந்த்ரா காவல்துறை, மும்பை சைபர் க்ரைம் போலீஸ், சத்தீஸ்கர் காவல்துறை இணைந்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்ற தகவலையும் காவல் துறையினர் பகிர்ந்துள்ளனர்.

மேலும் அந்த விசாரணையில் ராய்பூரைச் சேர்ந்த முகமது ஃபைசன்கான் என்பவரின் செல்போனில் இருந்துதான் ஷாருக்கானுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.