செவ்வாய்க்கிழமை இன்று 22ஆம் தேதி அன்று பஹல்காம் பகுதியில் நடைபெற்ற பயங்கரவாதிகளின் துப்பாக்கி சூட்டில் 26 பேர் உயிரிழந்ததை அடுத்து அதே செவ்வாய்க்கிழமை அன்று கௌதம் கம்பீர் அவர்களுக்கும் அவருடைய மின்னஞ்சலுக்கு இரண்டு முறை கொலை மிரட்டல் செய்தி வந்திருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராகவும் முன்னால் எம்பியும் ஆக இருக்கக்கூடிய கௌதம் கம்பீர் அவர்களுக்கு ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளிடம் இருந்து 2 முறை கொலை மிரட்டல் வந்திருப்பதாக டெல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்து தனக்கும் தன்னுடைய குடும்பத்திற்கும் பாதுகாப்பு வழங்குமாறு கோரிக்கை வைத்திருக்கிறார்.
பயங்கரவாத கும்பலின் நடவடிக்கையை எதிர்த்து தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் கௌதம் கம்பீர் அவர்கள் தன்னுடைய பதிவை போட்டதை தொடர்ந்து தன்னுடைய மின்னஞ்சலுக்கு கொலை மிரட்டல் வந்ததாக தெரிவித்திருக்கிறார். எனவே இவர் எம்பி ஆக இருந்த 2021 ஆம் ஆண்டில் இவருக்கு இதே போன்ற ஒரு கொலை மிரட்டல் மின்னஞ்சலில் வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி காவல்துறையும் தீவிர விசாரணையில் இறங்கி இருப்பதோடு உக்கிரமாக கௌதம் கம்பீர் அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் பாதுகாப்பு வழங்குவது குறித்து முடிவுகள் எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கௌதம் கம்பீர் அவர்களுக்கு வந்த மின்னஞ்சலில் ” நாங்கள் உன்னை கொல்ல போகிறோம் ” என்ற வரிகள் இடம்பெற்று இருப்பது குறிப்பிட்டு காட்டப்பட்டிருக்கிறது.