ரேஷன் கடை ஊழியருக்கு கொலை மிரட்டல்! போலீசார் கைது!

0
211
Death threat to ration shop employee! Police arrested!
Death threat to ration shop employee! Police arrested!

ரேஷன் கடை ஊழியருக்கு கொலை மிரட்டல்! போலீசார் கைது!

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள நாகலாபுரம் பகுதியை சேர்ந்தவர் விஜிலா (26). இவர் காடல் குடி அருகே மாவிலோடை பகுதியில் உள்ள ரேஷன் கடையில் விற்பனையாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த நான்காம் தேதி அவர் தனது தங்கையுடன் ரேஷன் கடையில் வேலை செய்து வந்தார். அங்கு ரேஷன் பொருட்கள் வாங்க மாவில் ஓடை பகுதி சேர்ந்த குமரய்யா மகன் பிரதீப் மேனன் (48) என்பவர்  வந்தார் அவர் டாஸ்மாக் கடை விற்பனையாளர்ஆக பணிபுரிந்து வருகிறார்.

மேலும் விற்பனையாளரின் தங்கை ரேஷன்  பொருட்களை எடை போடும் போது செல்போனில் பிரதீப் மேனன் புகைப்படம் எடுத்துள்ளார். அதனை  கண்டித்த விற்பனையாளரை பிரதீப் மேனன் தகாத வார்த்தையால் பேசியும் கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்றுள்ளார்.

மேலும் இது குறித்து  காடல்குடி போலீசாரரிடம் புகார் கொடுத்தனர்.  அந்த புகாரின்  பேரில் காடல்குடி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் நாகராஜன் வழக்கு பதிவு செய்து பிரதீப் மேனனை கைது செய்தார். அரசு ஊழியருக்கே கொலை மிரட்டல் விடுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Previous articleமருத்துவர்களின் பணிநேரம் உயர்த்தப்பட்டதைக் கண்டித்து தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம் போராட்ட அறிவிப்பு 
Next articleகனமழை குறித்து வானிலை மையம் அறிவிப்பு! 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை