மீண்டும் கொலை மிரட்டல்! தமிழகத்தில் தொடரும் மணல் குவாரி கொள்ளை!  

Photo of author

By Rupa

மீண்டும் கொலை மிரட்டல்! தமிழகத்தில் தொடரும் மணல் குவாரி கொள்ளை!  

Rupa

Death threats again! Sand quarry robbery continues in Tamil Nadu!

மீண்டும் கொலை மிரட்டல்! தமிழகத்தில் தொடரும் மணல் குவாரி கொள்ளை!

சில தினங்களுக்கு முன்பு கரூர் மாவட்டத்தின் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த கல் குவாரியை குறித்து சமூக ஆர்வலர் போலீசில் புகார் அளித்தார். அந்த சமூக ஆர்வலர் புகார் அளித்ததால் மணல் குவாரி உரிமையாளர்கள் அவரை  கொலை செய்தது குறிப்பிடத்தக்கது. பாமக கட்சி தலைவரும் இதற்கு கண்டனம் தெரிவித்தார். அந்த வரிசையில்  மீண்டும் ஒரு சம்பவம் அரங்கேறி உள்ளது. பெரியபாளையம் அடுத்துள்ள மண்வாசல்ப பகுதியில் மணல் குவாரி ஒன்று உள்ளது. அங்கு அரசாங்க விதிகளை மீறி மணல் எடுத்து வருகின்றனர். இவ்வாறு பல நாட்களாக நடந்துவந்துள்ளது.இதனை எதிர்த்து கேட்டால் கொன்று விடுவார்கள் என்ற எண்ணத்தில் யாரும் கேட்பதில்லை.

இதனை கண்ட அப்பகுதியை சேர்ந்த ஒருவர் காவல்துறையில் புகார் அளித்துள்ளார். இவர் புகார் அளித்ததின்  பெயரில் காவல்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். இந்த நடவடிக்கையால் மிகுந்த கோபம் அடைந்த மணல் குவாரி நடராஜ், புகார் அளித்த சமூக ஆர்வலரை செல்போனில் தொடர்பு கொண்டுள்ளார். அவ்வாறு தொடர்பு கொண்டு, நான் வந்ததுக்கப்புறம் பாரு…. நான் உன்னை வெளியே வந்து என்ன பண்றேன்னு பாரு…. உன்னை கொன்னே புடுவேன்…. இவ்வாறு சமூக ஆர்வலரை மணல் குவாரியின் ஆதரவாளர் மிரட்டியுள்ளார். இவ்வாறு மிரட்டியதை சமூக ஆர்வலர் ரெக்கார்ட் செய்துள்ளார். தற்பொழுது இதனை சமூக வலைத்தளத்திலும் பதிவிட்டுள்ளார். மேற்கொண்டு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.