போலீசார்ருக்கே கொலை மிரட்டலா? சேலம் மாவட்டத்தில் வசித்து வந்த தம்பதிகள் கைது!
சேலம் மாவட்டம் சங்ககிரி அருகே உள்ள புல்லாகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார். இவர் அப்பகுதியில் பிரபல ரவுடி எனவும் அழைக்கப்படுவார். இவரது மனைவி பவித்ரா என்கிற மகேஸ்வரி (28).மேலும் ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த மேட்டு நாசுவன்ப்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மாட்டு மருத்துவமனை பிரிவில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தவர் மெய்யப்பன் (19). மேலும் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சேர்ந்த சரவணன் (24). பவானி குப்பிச்சிபாளையம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்த அஜித் (24). ஆகிய மூன்று பேரையும் கஞ்சா வழக்கில் கடந்த 17ஆம் தேதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
மேலும் சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த விஜயகுமாரும் அவரது மனைவி பவித்ரா என்கிற மகேஸ்வரியும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததாக சித்தோடு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் பேரில் சித்தோடு சப் இன்ஸ்பெக்டர் குகனேஸ்வரன் விஜயகுமாரை கைது செய்தனர்.மேலும் விஜயகுமார் தன்னுடைய மனைவியை கைது செய்யக்கூடாது என்றும் மீறி கைது செய்தால் கொலை செய்து விடுவேன் என்றும் மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் இதைப் பற்றி சப் இன்ஸ்பெக்டர் குணசேகரன் சித்தோடு போலீசில் புகார் அளித்தார் அந்த புகாரின் பேரில் விஜயகுமாரை போலீசார் கைது செய்தார்கள். கைது செய்யப்பட்ட விஜயகுமார் மீது இதுவரை பழனி அருகே கீழானூரில் ஒரு கொலை வழக்கு மற்றும் திருட்டு, கஞ்சா விற்பனை தொடர்பாக மொத்தம் 13 வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது. போலீசருக்கே கொலை மிரட்டல் விடுதலை கேட்டா அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.