சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் மானியக்கோரிக்கை மீதான காரசார விவாதம்!!

Photo of author

By Savitha

தமிழகத்தில் 2022-23 ஆம் ஆண்டு ஆயத்தீர்வை  ஊலம் 10 ஆயிஒரத்து 401 கோடி ரூபாய்க்கும், மதிப்புக்கூட்டு வரி மூலம் 33 ஆயிரத்து 697 கோடி ரூபாய் என மொத்தம் 44 ஆயிரத்து 98 கோடி ரூபாய் அளவுக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக மதுவிலக்கு மர்றும் ஆயத்தீர்வை துறையின் கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது கடந்த 2022-22 நிதியாண்டை ஒப்பிடும் போது, 8 ஆயிரத்து 47 கோடி ரூபாய் அதிகம்.

சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைப்பெற்றது. அதையொட்டி அவையில் கொள்கை விளக்கக் குறிப்பு வைக்கப்பட்டது.

அதில் 2018 -19 ஆம் ஆண்டில் 31 ஆயிரத்து 157 கோடி ரூபாய்க்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 2017-18 ஐ ஒப்பிடும் போது 4 ஆயிரத்து 359 கோடி ரூபாய் அதிகம்.

2019-20 ல் 33 ஆயிரத்து 133 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இது 2018-19 ஐ ஒப்பிடும் போது ஆயிரத்து 975 கோடி அதிகம். ( கொரோனா காலம்)

2020-21 ஆம் ஆண்டில் 33 ஆயிரத்து 811 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இது 2019-20 ஐ ஒப்பிடும் போது 677 கோடி அதிகம். ( கொரோனா காலம்)

2021-22 ஆம் ஆண்டில் 36 ஆயிரத்து 50 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது. இது 2020-21 ஐ ஒப்பிடும் போது 2 ஆயிரத்து 239 கோடி அதிகம்.

2022-23 ஆம் ஆண்டில் 44 ஆயிரத்து 98 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது 2021-22 ஐ ஒப்பிடும் போது 8 ஆயிரத்து 47 கோடி ரூபாய் அதிகம்.

மது விற்பனை குறித்து 2003-04 நிதி ஆண்டு முதல் 2022-23 நிதி ஆண்டு வரை 20 நிதியாண்டுகளுக்கான விற்பனை குறித்த விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் 2022-23 ஆம் ஆண்டில் மட்டும் சராசரி அளவை விட 8 ஆயிரத்து 47 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளத தெரியவந்துள்ளது.