பெண்ணிடம் நகையை ஏமாத்தி! கொள்ளையடித்து சென்ற 2நபர்!

Photo of author

By CineDesk

 பெண்ணிடம் நகையை ஏமாத்தி! கொள்ளையடித்து சென்ற 2நபர்!

CineDesk

Updated on:

Deceived jewelry from the woman! 2 people robbed!

 பெண்ணிடம் நகையை ஏமாத்தி! கொள்ளையடித்து சென்ற 2நபர்!

திருச்சி மாநகரம் பாலக்கரை அந்தோணியார் கோவில் பகுதியை சேர்ந்தவர் காளிமுத்து இவரிடம் கடந்த டிசம்பர் மாதம் 2021 பாலக்கரை பிரதான சாலையில் உள்ள ஸ்ரீநிவாசா மெட்டல்ஸ் அருகில் இவர் நடந்து வந்து கொண்டிருந்தார். அவர் தனது கழுத்தில் 13 சவரன் நகையை போட்டு வந்து கொண்டிருந்தார்.

இதனை பார்த்த இரண்டு திருடர்கள் அவரை நோக்கி சென்றனர். அப்போது அடையாளம் தெரியாத மாதிரி முகத்தை மாற்றி கொண்டு இருவரும்  அவர்களிடம் காவல்துறை நகைகளை பாதுகாத்து வைத்துக்கொள்ள அறிவுரைத்து வருகிறது. இதற்கு  இவளோ நகையை போட்டு வெளிய செல்கிறிர்கள். இந்த பகுதியில் திருடர்கள் அதிகமாக உலா வருகிறாக்கள்.

எனவே உங்களுடைய நகையே பாதுகாத்து வைத்துக் கொள்ளுங்கள் என்று கூறினர். பின்னர் அவருக்கு என செய்வது என்று தெரியாமல் திகைத்து பொய் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர்கள் நாங்கள் பாதுகாப்பாக வைத்து தருகிறோம் என்று கூறினர். இதனை அவர் மடத்தனமாக நம்பி  தன்னுடைய 13 சவரன் நகையை கழட்டி அந்த மர்ம நபர்களிடம் கொடுத்து விட்டார்.

பின்னர் அவர்கள் இருவரும் அவர் கொடுத்த நகைகளை கையில் வாங்கி பையில் போட்டுக் கொண்டனர். பின்னர் அவர்கள் காளிமுத்துவை திசை திருப்பி விட்டு அங்கிருந்து இருவரும் தப்பி சென்றுள்ளன. இது குறித்து காளிமுத்து பாலக்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.