அமெரிக்காவில் முதற்கட்டமாக 7 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற முடிவு!! அதிபர் ட்ரம்ப்!!

Photo of author

By Gayathri

அமெரிக்காவில் முதற்கட்டமாக 7 லட்சம் இந்தியர்களை வெளியேற்ற முடிவு!! அதிபர் ட்ரம்ப்!!

Gayathri

Decision to deport 7 lakh Indians in the first phase in America!! President Trump!!

அமெரிக்காவில் அத்துமீறி குடியேறி இருக்கக்கூடிய வெளிநாட்டு நிறை அந்நாட்டு அதிபர் தன் நாட்டை விட்டு வெளியேற்ற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன. அதிலும் குறிப்பாக அமெரிக்காவிற்கு படிக்க வந்த மாணவர்களின் கணக்கெடுப்பு நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

தற்பொழுது அமெரிக்கா அரசு பின்பற்றவுள்ள செயல்முறைகள் :-

✓ அமெரிக்காவில் விசா இல்லாமல் தங்கி இருக்கக்கூடிய இந்தியர்களின் கணக்கெடுப்பு

✓ பட்டம் மேற்படிப்பிற்காக விசா பெற்று வேலை பார்ப்பவர்களுடைய கணக்கெடுப்பு

✓ படிப்பதற்காக அமெரிக்காவிற்கு சென்று அங்கு பார்ட் டைமில் வேலை பார்க்கக் கூடிய இந்திய மாணவர்களின் கணக்கெடுப்பு

✓ அமெரிக்காவிற்கு சுற்றுலா விசா பெற்று அங்கு தங்கி வேலை பார்க்கக் கூடியவர்களின் கணக்கெடுப்பு

✓ H1B விசா காலாவதியானவர்களை கணக்கெடுத்தல்

இதுபோன்ற முக்கிய கணக்கெடுப்புகளில் அடங்கக்கூடிய இந்தியர்களை அமெரிக்க அரசாங்கது கைது செய்யும் அல்லது இது குறித்து இந்திய அரசிடம் இரண்டு கோரிக்கைகளை வைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா அரசு இந்திய அரசிற்கு வைக்கக்கூடிய 2 கோரிக்கைகள் :-

1 . முறைகேடாக அமெரிக்காவில் தங்கி இருக்கக்கூடிய இந்தியர்களை இந்திய விமானத்தில் தங்களுடைய நாட்டிற்கு அழைத்துச் செல்ல வேண்டும்.

✓ அல்லது அமெரிக்க ராணுவ விமானத்தை இந்தியாவானது தங்களுடைய நாட்டிற்குள் அனுமதிக்க வேண்டும் என இரண்டு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு இந்த இரண்டு கோரிக்கையும் ஏற்கப்படவில்லை என்றால் இந்திய அரசின் மீதான வரியில் கூடுதல் வரி விதிப்பு மேற்கொள்ளப்படும் என டொனால்ட் டிரம்ப் அவர்கள் திட்டம் வகுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனுடைய முதற்கட்டமாக அமெரிக்க அரசின் கணக்குப்படி அமெரிக்காவில் வசிக்கக்கூடிய 7 லட்சம் இந்தியர்கள் சட்டவிரோதமாக குடியேறி இருப்பதாகவும் இவர்களில் குஜராத்தை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் மெக்சிகோ வழியாக அமெரிக்காவிற்கு தஞ்சம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.