தமிழ்நாட்டில் இந்த வருடம் பல்வேறு பிரிவுகளின் கீழ் 5 லட்சம் வீட்டுமனை பட்டாக்கள் வழங்க முடிவு செய்திருப்பதாக தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் வேகமாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் முதலில் இந்த நிகழ்வு மதுரையில் துவங்கிய நிலையில் தற்பொழுது நாமக்கல்லில் தொடர இருப்பதாக தகவல்கள் வெளியாக்கியுள்ளன.
பட்டா வழங்குவதற்கான நிகழ்வு கடந்த மார்ச் மாதமே நடைபெற இருந்த நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடர் காரணமாக தேதி ஒத்திவைக்கப்பட்டது. அதன்படி வருகிறமே 16ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் மதுரைக்கு நேரில் வந்து பட்டாக்களை உரியவர்களுக்கு வழங்குவார் என்றும் அதனால் 11 தாலுகாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டாக்கள் தயாரிக்கும் பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக புறம்போக்கு நிலங்களில் வசிக்கக்கூடியவர்களின் கணக்கெடுப்பு நடைபெற்று வருவதாகவும் அதற்கான பட்டாக்கள் பெண்களினுடைய பெயரில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மதுரையை தொடர்ந்து நாமக்கல் மாவட்டத்திலும் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் வந்து நகர்புற பகுதிகளில் நீண்ட நாட்களாக பட்டா என்று இருக்கக்கூடியவர்களுக்கு மற்றும் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக வீடு கட்டி வாழக்கூடிய நபர்களுக்கும் பட்டா வழங்க அறிவுறுத்தி இருப்பதாகவும் அதற்கான பணிகள் நாமக்கல் மாவட்டத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக நாமக்கல் மாவட்டத்தில் வசந்தபுரம் என்கின்ற ஊரில் இருக்கக்கூடிய குடியிருப்பு வாசிகள் நகர்ப்புற வீட்டுமனை பட்டா வழங்கும் சிறப்பு திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து வருவதாகவும் அவர்களுக்கு கலெக்டர் உமா நேரில் சென்று ஆய்வு மேற்கொள்வதோடு அவர்கள் நீண்ட நாட்களாக அங்கு வாழ்வதற்கான வீட்டு வரி ரசீதையும் மின் இணைப்பு ரசீது வருமான வரம்ப உள்ள தாவணங்களையும் சரிபார்த்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் மாவட்டம் மட்டுமல்லாது திருவள்ளூர் மாவட்டத்தில் மட்டும் 63,124 பேருக்கு பட்டா வழங்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழக முழுவதும் ஒரு வருடத்திற்கு 1.11 கோடி பட்டாக்கள் வழங்க இருப்பதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிப்பது பட்டா இல்லாத நிலம் மற்றும் வீடு வைத்திருக்கக் கூடியவர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.